ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்.எல்.பி, அனுபமா விக்ரம் சிங், ஆர்.வேணுகோபால் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘மையல்’. ஜெயமோகன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள இப்படத்தை ஏ.பி.ஜி.ஏழுமலை இயக்குகிறார். சேது மற்றும் சம்ரித்தி தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீடு மற்றும் திரைப்படத்தின் வெளியீடு குறித்த விவரங்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள மெல்லிசை பாடலான “என்னடி செஞ்ச என்னோட நெஞ்ச...” என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இசையமைப்பாளர் அமர்கீத் இசையில், பாடலாசிரியர் ஏகாதசியின் வரிகளில், சத்யப்ரகாஷ் மற்றும் வந்தனா ஸ்ரீனிவாசன் குரலில் உருவாகியுள்ள இப்பாடல், ”கூட மேல கூட வச்சு”, ”கண்கள் இரண்டால்” போன்ற இனிமை நிரம்பிய பாடல்களின் வரிசையில் இணைந்திருக்கிறது.
மிக எளிமையாக அமைக்கப்பட்ட இசை பின்னணி, பாடலின் உணர்வுபூர்வ தன்மையை தெளிவாக வெளிப்படுத்துவதோடு, கேட்போரை மெய்மறக்கச் செய்கிறது.
தற்போது யூட்யூப் மற்றும் அனைத்து முக்கிய இசை தளங்களில் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் இப்பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வரப்போவது உறுதி.
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...