கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் சிவராஜ்குமார், நடிப்பில் உருவாகும் பிரமாண்டமான திரைப்படத்தை தமிழ் சினிமா இயக்குநர் பாலாஜி மாதவன் இயக்குகிறார்.
இயக்குநர் பி.வாசுவின் தங்கை மகனான பாலாஜி மாதவன், இயக்குநர் மிஷ்கின், நடிகர் மற்றும் இயக்குநர் மாதவன் ஆகியோரும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். ‘இடி மின்னல் காதல்’ படம் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமான பாலாஜி மாதவன், தனது இரண்டாவது படமாக சிவராஜ்குமார் படத்தை இயக்குகிறார்.
ஷ்ரிதிக் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சார்கர், கிருஷ்ணகுமார், சூரஜ் சர்மா ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கன்னடத் திரையுலகின் தன்னிரகற்ற வசூல் மன்னனாக திகழ்ந்த நடிகர் டாக்டர்.ராஜ்குமார் பிறந்தநாளான ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக உள்ளது.
படத்தின் தலைப்பை விரைவிலேயே பிரத்யேகமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. தனித்துவமான கதையம்சம் கொண்ட படமாக இருப்பதால் சிவராஜ்குமார் அவர்களின் ஆலோசனைப்படி, இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என அவர் ரசிகர்கள் யூகிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...
பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...