’முந்திரிக்காடு’ படத்தை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் நடிகராக ஒரு திரைப்படத்தில் களம் இறங்கியுள்ளார். ‘தர்மயுத்தம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியுள்ளார்.
ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என விசாரணை கிரைம் திரில்லராக பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை ‘தப்பாட்டம்’, ‘ஆண்டி இண்டியன்’, ‘உயிர் தமிழுக்கு’ ஆகிய படங்களை தயாரித்த மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க.சிவக்குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில், சீமான் மற்றும் ஆர்.கே.சுரேஷ் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். பிரபல மலையாள நடிகை அனு சித்தாரா நாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன் , சாட்டை துரை முருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டியலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
'பரதேசி', 'தாரை தப்பட்டை', 'ஜோக்கர்', 'டூ லெட்' போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து செழியன் ஒளிப்பதிவு செய்ய, 'சீதா ராமம்', 'சித்தா' ஆகிய படங்களைத் தொடர்ந்து விஷால் சந்திரசேகர் இசையமைக்க , கவிப் பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியிருக்கிறார். படத்தின் தொகுப்பாளாராக புவன் சீனிவாசனும், கலை இயக்குநராக மாயப்பாண்டியும், தயாரிப்பு நிர்வாகியாக முத்.அம்.சிவக்குமாரும் பணியாற்றியுள்ளனர். மக்கள் தொடர்பு ஆ.ஜான்.
தென்காசி,குற்றாலம், திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம, நகர்ப் புறங்களிலும் படமாக்கப்பட்டுள்ள ‘தர்மயுத்தம்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களிலும், வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடிப்பது மட்டும் இன்றி, அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்தும் ஒரு சிலர் நடிகர்களில் விக்ரம் பிரபுவும் ஒருவர்...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரனின் பிரமாண்டமான தயாரிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பராசக்தி’...
தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட மூத்த பத்திரிகையாளர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன், ‘டூரிங் டாக்கீஸ்’ என்ற பெயரில் யூடியுப் சேனல் ஒன்றை தொடங்கி நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என ஏராளமான திரை கலைஞர்களை நேர்காணல் கண்டு பல அறிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்...