Latest News :

அமெரிக்காவை அதிர வைக்கப்போகும் ‘கண்ணப்பா’!
Monday April-28 2025

இந்திய சினிமாவின் தலைசிறந்த படைப்பாக உருவாகியுள்ள விஷ்ணு மஞ்சுவின் ‘கண்ணப்பா’ திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படங்களில் முக்கியமானதாக உருவெடுத்துள்ள நிலையில், தற்போது சர்வதேச அளவில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் பணியினை நாயகனும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு மேற்கொண்டுள்ளார்.

 

இதற்காக தனது படக்குழுவினருடன் அமெரிக்கா பயணப்பட இருக்கும் விஷ்ணு மஞ்சு, மே மாதம் 8 ஆம் தேதி, அமெரிக்காவில் ‘கண்ணப்பா’ படத்தின் சர்வதேச அளவிலான விளம்பர பணியை தொடங்க உள்ளார்.

 

இந்திய திரைப்படங்களின் உலகளாவிய விளம்பரங்களுக்கும், வியாபாரத்திற்கும் ஒரு மிகப்பெரிய தொடக்கமாக இருக்கும் இந்த முயற்சியின் மூலம், ‘கண்ணப்பா ரோட் ஷோ’ ஒன்றை அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடத்த திட்டமிட்டிருக்கும் விஷ்ணு மஞ்சு, டல்லாஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல் என அமெரிக்காவின் முக்கிய பகுதிகளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்த உள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சிகளில் ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சிகள் மற்றும் பாடல்கள் உள்ளிட்ட இதுவரை வெளியிடப்படாத கண்ணப்பாவின் உலகத்தை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்த உள்ளார்.

 

இந்த சர்வதேச முயற்சியின் மூலம் இந்தியாவைப் போல் அமெரிக்காவிலும் ‘கண்ணப்பா’ திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ள விஷ்ணு மஞ்சு, ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் பணியாக மட்டும் இன்றி, ஒரு காவிய திரைப்படத்தின் மிகச்சிறந்த அனுபவம் மூலம் உலகளாவிய பார்வையாளர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாகவும் இதனை பார்க்கிறார்.

 

வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படம், அதன் கதை சொல்லல், பிரமாண்டமான மற்றும் வியக்க வைக்கும் சாகச காட்சிகள் மற்றும் ஆழமான ஆன்மீகம் போன்றவற்றால் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமெரிக்காவில் இருந்து தொடங்கும் அதன் சர்வதேச விளம்பர பணிகள் மூலம், ‘கண்ணப்பா’ இந்திய திரையுலகில் மட்டும் இன்றி உலக திரையுலகிலும் மகத்தான வரவேற்பை பெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

10459

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியான ‘உஃப் யே சியாபா’!
Friday September-05 2025

லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குநர்  ஜி...

இன்னும் 25 வருடங்களில் அரிசி இருக்காது - அதிர்ச்சியளித்த ‘நாகரீகப் பயணம்’ பட தயாரிப்பாளர்
Friday September-05 2025

ரிச் மூவிஸ் மற்றும் டி.எஸ்.கே மூவிஸ் சார்பில், தாஸ் சடைக்காரன், பி...

Recent Gallery