நடிகர் அஜித்குமார் மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது பெற்றதை தொடர்ந்து அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி பிரபல தெலுங்கு திரையுலக நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண், அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பதம பூஷன் விருதைப் பெற்ற புகழ்பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார்.
திரையுலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையை அவர் பதித்துள்ளார். ஃபார்முலா 2 கார் பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அஜித் குமார் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
சன்லைட் மீடியா எழுமலை ஏ.எஸ்...
லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில் பிரபல இயக்குநர் ஜி...
ரிச் மூவிஸ் மற்றும் டி.எஸ்.கே மூவிஸ் சார்பில், தாஸ் சடைக்காரன், பி...