தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல இனிமையான பாடல்களை பாடியுள்ள பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி, வரும் 28 ஆம் தேதிக்கு பிறகு திரைப்படம் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் தான் பாடப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ஏற்கனவே, தனது இசை பயணத்திற்கு விடை கொடுத்த எஸ்.ஜானகி, நெருங்கிய நண்பர்களது வேண்டுகோளுக்கு இனங்க சில திரைப்படங்களிலும், இசை நிகழ்ச்சிகளிலும் மீண்டும் பாடி வந்த நிலையில், கடந்த ஆண்டு ’10 கல்பனைகள்’ என்ற மலையாள படத்தில் பாடினார்.
இந்த நிலையில் வருகிற 28 ஆம் தேதி முதல் சினிமா மற்றும் இசை நிகழ்ச்சிகளில் பாட போவதில்லை என்று எஸ். ஜானகி மலையாள பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் மேலும் கூறிய எஸ்.ஜானகி, “இன்றைய இசை உலகில் பல பாடகர்கள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்கள். சிறப்பாகவும், இனிமையாகவும் பாடுகிறார்கள்.
நான், வருகிற 28 ஆம் தேதி மைசூரில் நடைபெறும் அறக்கட்டளை இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறேன். அந்த நிகழ்ச்சி தான் இசை உலகில் எனது கடைசி நிகழ்ச்சியாக இருக்கும். அதன் பிறகு பொது மேடைகளில், இசை நிகழ்ச்சிகளில் நான், பங்கேற்க மாட்டேன். எளிய வாழ்க்கை வாழ விரும்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்./
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...