Latest News :

கேபிஒய் பாலா கதாநாயகனாக அறிமுகமாகும் புதிய படம் தொடங்கியது!
Friday May-09 2025

ஜெய்கிரண் தலைமையிலான ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தனது தயாரிப்பில் உருவாக்கும் முதல் திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பல்வேறு வெற்றிகரமான தயாரிப்புகளில் பணியாற்றிய அனுபவமுள்ள ஜெய்கிரண், தனக்கு நெருக்கமான கதையை உணர்வுபூர்வமாக மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.

 

இந்த திரைப்படத்தின் மூலம், ரசிகர்களுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பரிச்சயமான KPY பாலா, கதாநாயகனாக தனது சினிமா பயணத்தைத் தொடங்குகிறார். இதுவரை தனது நகைச்சுவை நடிப்பால் பிரபலமான பாலா, இந்த திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இத்திரைப்படத்தை இயக்கும் ஷெரீஃப், தனது முதல் திரைப்படமான ரணம் அறம் தவறேல் மூலம் விமர்சன ரீதியாகவும், மக்களிடையே கொண்டாட்டமளிக்கும் வரவேற்பையும் பெற்றவர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய திரைப்படம், ஒரு Feel-Good Emotional Drama ஆக உருவாகிறது. இப்படத்திற்கு அவர் தான் கதை மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.

 

படம் குறித்து இயக்குநர் ஷெரீஃப் கூறுகையில், “‘ரணம் அறம் தவறேல்’ என்ற த்ரில்லர் படத்திற்கு பிறகு, நான் இயக்கும்  “இந்தக் கதை எனது மனதிற்கு மிகவும் நெருக்கமானது. எனது இரண்டாவது திரைப்படமாக இந்த கதையை தர வேண்டும் என்பதே என் நோக்கம். நான் இந்தக் கதையை தயாரிப்பாளர் திரு. ஜெய்கிரணிடம் கூறியதும், யோசனையில்லாமல் உடனே ‘ஆம்’ என்று சொன்னார். அந்த நம்பிக்கையும், நேரடி ஆதரவும் ஒரு இயக்குநராக எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் உறுதியையும் வழங்கியது. பாலா கதாநாயகனாகவும் ,  தேசிய விருது பெற்ற இயக்குனர்பாலாஜி சக்திவேல் சார்,தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா மேடம் ஆகியோருடன் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு பெருமை நிரம்பியது .இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிறது. நேர்த்தியான சினிமா கொடுக்க வேண்டும் என்ற என் எண்ணத்தின் தொடர்ச்சியாகவே இந்த படம் அமையும்.” என்றார்.

 

நமிதா கதாநாயகியாக  நடிக்கும் இப்படத்தில் தேசிய விருது பெற்ற பாலாஜி சக்திவேல்  மற்றும் தேசிய விருது பெற்ற அர்ச்சனா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

 

விவேக் & மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு, பாலாஜி கே.ராஜா ஒளிப்பதிவு செய்கிறார். சிவந்தீஸ்வர் படத்தொகுப்பு செய்கிறார். மணிமொழியன் ராமதுறை கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

Related News

10471

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியான ‘உஃப் யே சியாபா’!
Friday September-05 2025

லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குநர்  ஜி...

Recent Gallery