பழம்பெரும் நடிகர் மறைந்த நாகேஷ் அவர்களின் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘வானரன்’. பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும், தந்தை மகள் உறவை சொல்லும் கதைக்களத்தோடு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஸ்ரீராம் பதமநாபன் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே ‘டூ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
சந்தானம் நடித்த ’சர்வர் சுந்தரம்’, பிரபுதேவா நடித்த ’பொன் மாணிக்கவேல்’ ஆகிய படங்களில் நடித்த நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அக்ஷயா கதாநாயகியாக நடிக்க லொள்ளு சபா ஜீவா, தீபா சங்கர், ஆதேஷ் பாலா, நாஞ்சில் விஜயன், எஸ்.எல் பாலாஜி, பேபி வர்ஷா, வெங்கட்ராஜ் , சிவகுரு, ராம்ராஜ், வெடிக்கண்ணன், மேடை கலைஞர்களான நாமக்கல் விஜயகாந்த், ஜூனியர் டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஆரஞ்ச் பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மநாபன் மற்றும் சுஜாதா ராஜேஷ் தயாரித்துள்ள ‘வானரன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், வரும் மே 16 ஆம் படத்தின் பாடல்கள் வெளியாக உள்ளது.
பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ் சார்பில் ராமாபுரம் எம்.கே ராஜேஷ் தமிழ்நாடு முழுவதும் ’வானரன்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
நிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு, ஷாஜகான் இசையமைத்துள்ளார். செந்தமிழ் பாடல்கள் எழுதியுள்ளார். வித்து ஜீவா படத்தொகுப்பு செய்துள்ளார். மக்கள் தொடர்பாளராக வெங்கட் பணியாற்றுகிறார்.
நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் என்...
தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...