தமிழ் சினிமாவின் தற்போதைய ஹாட் மற்றும் வைரல் ஹீரோவாக உருவெடுத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். அவர் நடித்த அறிமுகப் படமே ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், அடுத்ததாக வெளியான ‘ட்ராகன்’ படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால், பல இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பிரதீப் ரங்கநாதனின் தேதி வாங்க மும்முரம் காட்டி வருகிறார்கள். அட, கோலிவுட் தயாரிப்பாளர்கள் மட்டும் அல்ல, தெலுங்கு தயாரிப்பாளர்களும் பிரதீப்பை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க பேரார்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகியாக ‘பிரேமலு’ புகழ் மமிதா பைஜு நடிக்கிறார்.
‘டியூட்’ (Dude) என்ற இப்படத்தின் தலைப்பும், பிரதீப் ரங்கநாதனின் அறிமுக போஸ்டரும் வெளியான நாள் முதல் படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது மமீதா பைஜுவின் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டு எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அதிலும், சாதாரணமாக இல்லை. அரை நிர்வாணத்தில் பிரதீப் ரங்கநாதன் நிற்க, அவர் அருகே மமீதா பைஜூ நிற்பது போன்ற புகைப்படம் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
தற்போது இந்த புகைப்படம் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு, படத்திற்காக ஆவலோடு காத்திருப்பதாக பிரதீப் ரசிகர்கள் கமெண்ட் தெரிவித்தும் வருகிறார்கள்.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில், விஷ்ணு மஞ்சு நடிப்பில் பிரமாண்டமான பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’-வில் பிரபாஸ், மோகன்லால், சரத்குமார், டாக்டர்...
நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் என்...
தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...