Latest News :

கோவிந்தா பாடலை கேலி செய்யவில்லை - நடிகர் சந்தானம் விளக்கம்
Tuesday May-13 2025

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 

'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

 

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' குறித்த தகவல்களை பகிரும் வகையில் கலகலப்பான முறையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் சந்தானம், திரைப்படத்தை வெளியிடும் நடிகர் ஆர்யா, இயக்குநர் பிரேம் ஆனந்த் கலந்து கொண்டனர்.

 

படம் குறித்து நாயகன் சந்தானம் பேசுகையில், ”இந்த படம் மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். ஆர்யாவும் நானும் எப்போதும் தொடர்பில் இருப்போம். அவ்வாறு ஒரு நாள் அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "நீ காமெடியெனா இருக்கும்போது ஜாலியா இருப்ப, இப்பல்லாம் அந்த ஃபன் இல்லையே, ஏன்?" என்று கேட்டார். அதற்கு நான் நாயகனாக இருக்கும் சவால்கள் குறித்தும், இன்னும் சில சிக்கல்கள் பற்றியும் அவரிடம் சொன்னேன். அப்போது அவர் "டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தில் நீ முழுவதுமாக இறங்கி வேலை செய். உன் மொத்த கிரியேட்டிவிட்டியையும் காட்டு. உன் பிரச்சனை எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்," என்றார்.

 

அப்படித்தான் இந்த படத்தை ஆரம்பித்து முடித்துள்ளோம். ஒரு நல்ல கதை, திரைக்கதை, காமெடி, ஆக்டிங் என எல்லாமே இதில் நிச்சயமாக உங்களை திருப்திப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். மே 16 தியேட்டரில் குடும்பத்துடன் போய் பாருங்கள்.

 

இயக்குநர் பிரேம் ஆனந்தை தமிழ் திரை உலகின் கிறிஸ்டோபர் நோலன் என்று நான் சொல்லுவேன். ஏனென்றால் ஆனந்த் பண்ற கதை எல்லாம் ஒரு லைனில் இருக்கவே இருக்காது. பல லேயர்களை கொண்டிருக்கும். கஷ்டமான விஷயங்களை அவ்வளவு எளிதாக, சுவாரஸ்யமாக ஒன்றாக கோர்த்திருப்பார். அது எப்படி என்று நமக்கு புரியவே புரியாது. அதுதான் பிரேம் ஆனந்த்.

 

இந்த படத்தையும் அவர் அப்படித்தான் அற்புதமாக உருவாக்கியுள்ளார். அவுட்புட் ரொம்ப நன்றாக இருந்தது, அருமையான காமெடி ட்ரீட்டாக இப்படம் ரசிகர்களுக்கு அமையும். நீங்கள் அனைவரும் முழுவதுமாக என்ஜாய் செய்வீர்கள். குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவருடனும் இணைந்து 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' படத்தை திரையரங்குகளில் பாருங்கள். 

 

வெங்கடாசலபதியின் கோவிந்தா பாடலை நாங்கள் கேலி செய்யவில்லை. நான் வெங்கடாசலபதியின் தீவிர பக்தன், அவரது பாடல் என் படத்தில் இருக்க வேண்டும் என்று தான் வைத்தேன். ஆனால், அதை சிலர் வேறு விதமாக பேசுகிறார்கள். அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. சென்சார் மற்றும் சட்டம் இரண்டும் தான் முக்கியம். இவற்றுக்கு உற்பட்டே என் படம் இருப்பதால், போறவங்க, வறவங்க சொல்றத கேட்க வேண்டியதில்லை.” என்றார்.

 

இயக்குநர் பிரேம் ஆனந்த் பேசுகையில், “முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற திருக்குறளுக்கு உதாரணமாக திகழ்பவர்கள் சந்தானம் மற்றும் ஆர்யா. அந்த நட்புதான் எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்து இருக்கிறது. இவ்வளவு பிரமாண்டமான இப்படத்தை தொடங்கும் போது நான் சந்தானத்திடம், "முதலாளி  கண்டிப்பா நான் பயங்கர ஹார்டு வொர்க் பண்ணி இந்த படத்தை சக்சஸ் பண்ணி உங்களுக்கும் ஆரிய சாருக்கும் சிலை வைப்பேன், என்றேன்.

 

அதன் பின்னர் படத்தின் ஷூட்டிங் பெரிய பெரிய லொகேஷன், குரூஸ் என்று நல்லபடியா போனது. பின்னர் போஸ்ட் ப்ரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளும் முடிந்து படம் முழுமையாக எப்போது தயாராகும் என்ற கேள்வி வந்தபோது சந்தானம் என்னை அழைத்து "நீ எங்களுக்கு சிலை வைக்கலன்னாலும் பரவாயில்லை, எங்க பிரண்ட்ஷிப்புக்கு உலை வச்சிராத, சீக்கிரம் படத்தை முடித்து கொடுத்துவிடு," என்று சொன்னார். ஆர்யா சார், படம் இப்போது முழுவதும் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.

 

இப்படத்தில் இரண்டு மூத்த இயக்குநர்களான கௌதம் வாசுதேவ் மேனன் சார் மற்றும் செல்வராகவன் சார் சிறப்பாக நடித்து ஒத்துழைத்தார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. கஸ்தூரி மேடம், நிழல்கள் ரவி சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி.

 

இது ஒரு சராசரி ஹாரர் படம் கிடையாது. இதற்குள் ஒரு பேண்டஸி உலகமே உள்ளது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் சவாலாக இருந்தன. இதற்காக இராப்பகலாக ஒத்துழைத்த அனைவருக்கும் மிக்க நன்றி. படம் மிகவும் அருமையாக வந்துள்ளது. மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. என்னுடைய கடந்த படமான 'டிடி ரிட்டர்ன்ஸ்' பெரிய வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் பத்திரிகையாளர்களாகிய நீங்கள் கொடுத்த ஆதரவு தான். இப்படத்திற்கும் அதே ஆதரவை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இது அனைவருக்குமான சம்மர் ட்ரீட் ஆக இருக்கும். இப்படத்தை டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்வதை வட சந்தானத்தின் நெக்ஸ்ட் லெவல் என்று சொல்லலாம். ரசிகர்கள் அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு சென்று இப்படத்தை பார்த்து மகிழ வேண்டும். நன்றி, வணக்கம்,” என்றார்.

 

நடிகர் ஆர்யா பேசுகையில், ”உங்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. 'டிடி ரிட்டர்ன்ஸ்' படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் ஒரு நல்ல ஸ்டோரி இருக்கும், அதற்கான ரீஸனிங் இருக்கும், ஒரு பிளே இருக்கும், ஒரு கேம் இருக்கும். பிரேம் அதை ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா எடுத்து காமெடியை ரொம்ப அழகா எக்ஸிக்யூட் பண்ணி இருப்பாரு.  அதே மாதிரி பிரேம்  என்னிடம் வந்து 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' கான்செப்ட் சொன்ன உடனே ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. ஒரு படத்துக்குள்ளயே கேரக்டர்ஸ் டிரான்ஸ்போர்ட் ஆயிடுறாங்க.

 

பிரேம் இந்த கதையை சொல்லி முடித்தவுடன் "நீ என்னிடம் சொன்ன மாதிரி அப்படியே நல்ல பட்ஜெட்டில் இந்த படத்தை எடுத்தால் சூப்பராக இருக்கும்" என்று சொன்னேன். படத்தை எப்படி உருவாக்கப் போகிறார் என்று ஆர்வமாக இருந்தேன். படம் முடிந்தவுடன் பார்த்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன். அனைவரும் இதை 100% எக்ஸ்பீரியன்ஸ் பண்ண முடியும் என்ன நம்புகிறேன்.

 

இந்த படத்தை சந்தானத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் செய்திருக்க முடியாது, அவருக்கு நன்றி. சந்தானமும் பிரேமும் சேர்ந்து ரொம்ப சூப்பரா இந்த படத்தை பண்ணி இருக்காங்க. கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் இந்த படத்துக்காக முழுமையாக வைத்துள்ளார்கள். ஒட்டுமொத்த குழுவினருக்கும் பாராட்டுகள்.

 

'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' சிறந்த பொழுதுபோக்கை ரசிகர்கள் அனைவருக்கும் வழங்கும். இப்படத்தை தொடர்ந்து இதன் அடுத்த பாகத்திற்கும் நாங்கள் இணைவோம் என்று நம்புகிறேன். இப்படத்தை வழங்குவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரும் ஆதரவு தாருங்கள், நன்றி.” என்றார்.

Related News

10479

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery