விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மீரா விஜய் ஆண்டனி பெருமையுடன் தயாரிக்கும் 12வது படமான ‘மார்கன்’ உலகம் முழுவதும் ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. முன்னணி எடிட்டராக வலம் வந்த லியோ ஜான் பால் இயக்கியுள்ள இப்படம், பரபரப்பும் மர்மமும் கலந்த குற்றவியல் த்ரில்லராக உருவாகியுள்ளது.
முன்னதாக வெளியான முதல் பார்வை போஸ்டர் மற்றும் “சொல்லிடுமா” என்ற சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இப்போது, திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து வருகிறது. மர்மம் மிக்க கதையம்சம் மற்றும் ஆழமான கதாபாத்திரங்களால், படம் பரபரப்பான திரை அனுபவத்தை தர உள்ளது.
மேலும், விஜய் ஆண்டனியின் சித்தப்பா மகன் அஜய் திஷான் இந்த படத்தின் முக்கிய வில்லனாக அறிமுகமாகிறார். தன் நடிப்பால் தமிழ் திரை உலகில் புதிய வில்லனாக முன்னிறைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆண்டனியுடன் நேரடியாக மோதும் அவரது கதாபாத்திரம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.
இந்த படத்தில் சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிரித்திகா, வினோத் சாகர், பிரிகிதா, தீப்ஷிகா, கலகப்போவது யாரு அர்ச்சனா, கனிமொழி, மற்றும் அந்தகாரம் நடராஜன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். குடும்பம்ங்கள் ரசிக்கக்கூடிய விதத்தில் உருவாகியுள்ள இப்படம், அதே சமயம் த்ரில்லர் தன்மையையும் தக்கவைத்துள்ளது.
‘சூது கவ்வும்’, ‘இன்று நேற்று நாளை’ போன்ற வெற்றிப் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய லியோ ஜான் பால் இப்படத்தின் இயக்குநராக பணியாற்றி, தனது அனுபவத்தை கதைக்களத்தில் வெளிப்படுத்தியுள்ளார். யுவா.எஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் கலை இயக்குநராக ராஜா.ஏ பணியாற்றியுள்ளார். விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.
மும்பையில் சிறப்பாக படம்பிடிக்கப்பட்ட நீருக்கடியில் எடுக்கப்பட்ட காட்சிகள் மற்றும் தரமான VFX வேலைகள், படத்தை பார்வையாளர்களுக்கு ஒரு கண்கொள்ளா அனுபவமாக மாற்ற உள்ளது.
திறமையான கதைக்கரு, நம்பகமான நடிப்பு மற்றும் தொழில்நுட்ப தரம் கொண்ட ‘மார்கன்’, தமிழ் சினிமாவின் முன்னணி த்ரில்லர் படமாக உருவெடுக்கிறது.
நியூ மங்க் பிக்சரஸ் சார்பில், தயாரிப்பாளர் பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நாயகனாக நடிக்க, அறிமுக இயக்குநர் என்...
தமிழ் திரைப்படத் துறையில் ஒரு மிகப்பெரிய சாதனையாக, ’டெவிலன்’ என்ற படம் உலக சாதனைப் புத்தகமான நோபிள் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் பெயர் பதிவு செய்துள்ளது...
ஐகானிக் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஒவ்வொரு ரசிகர் வீட்டிலும் சென்சேஷனல் ஸ்டார் ஆனது மட்டுமில்லாது, உலகம் முழுவதும் தன்னுடைய ஐகானிக் கேரக்டர் புஷ்பா ராஜ் மூலம் இன்னும் அதிக ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்...