ஹீரோயினாக நடித்து வருவதோடு, தனது இசை ஆர்வத்தின் பேரில் சில படங்களில் பாடல்களும் பாடி வரும் நடிகை ரம்யா நம்பீசன் ‘கூத்தன்’ படத்திற்காக குத்துப் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
நீல்கிரிஸ் ட்ரீம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, நடன கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்களின் வாழ்க்கை பின்னணியை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதில் ஹீரோவாக ராஜ்குமார் நடிக்க, ஹீரோயினாக ஸ்ரீஜீதா, சோனா ஆகியோர் நடிக்கிறார்கள். வில்லனாக பிரபுதேவாவின் தம்பி நாகேந்திர பிரசாத் நடிக்கிறார்.
ஏ.எல்.வெங்கி எழுதி இயக்கும் இப்படத்திற்கு பாலாஜி இசையமைக்கிறார். விவேகாவின் வரிகளில் “ஓடு ஓடு காதல் காட்டு மிராண்டி...” என்ற பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். இப்பாடல் பதிவு நேற்று சென்னையில் நடைபெற்றது.
இது குறித்து கூறிய ரம்யா நம்பீசன், “பாலாஜியின் இசையமைப்பில் நான் முதல் முறையாக பாடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். பல மொழிகளில் நான் பாடி இருந்தாலும் இந்தப் பாடல் வரிகளில் அமைந்துள்ள ஒரு சில வார்த்தைகளை உச்சரிக்க ஆரம்பத்தில் சற்று சிரமப்பட்டாலும், பாடலாசிரியர் விவேகா பாடல் ஒலிப்பதிவின் போது உடன் இருந்து உதவி செய்தார். அவரது உதவியுடன் பாடலை நன்றாக பாட முடிந்தது. சில தினங்களாக தொண்டைக் கட்டு இருந்த போதும் துள்ளல் மிகுந்த இந்த பாடலை பாடிப்பழகியதும் சோர்வு நீங்கி குரலும் வளம் பெற்று விட்டது” என்றார்.
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' ( My Lord) திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது சமூக அக்கறை மிக்க ஒரு படைப்பாகவும், ரசிகர்களை ரசிக்க வைத்த படைப்பாகவும் பார்வையாளர்களிடமும், விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த இப்படம் திரையரங்குகளில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது...
நவீன சைபர் குற்றத் த்ரில்லர் அம்சங்களையும், பாரம்பரிய உணர்வுகளையும் இணைக்கும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அச்சுத அவதாரம்’...
கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் 'ஹாட்ஸ்பாட் 2 ' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது...