‘மெர்சல்’ விவகாரம் ஒரு பக்கம் இருக்க, இதன் நடுவே இணையத்தில் மெர்சல் படத்தை பார்த்தேன், என்று பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா டிவி பேட்டி ஒன்றில் பகிரங்கமாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் பைரசியை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் இத்தகைய சூழலில், தேசிய கட்சியின் முக்கிய தலைவர் ஒருவரே இப்படி, பைரசியை பயன்படுத்தி திரைப்படம் ஒன்றை பார்த்ததாக ஒப்புக்கொள்வது, தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விஷால், எச்.ராஜாவுக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். இது குறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ”நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்” என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள், என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
எச். ராஜா அவர்களுக்கு... மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...