Latest News :

ரசிகர்கள் கொண்டாடும் ‘ராஜபுத்திரன்’ திரைப்படம்!
Monday June-02 2025

‘டூரிட்ஸ் ஃபேமிலி’, ‘மாமன்’ என்று தமிழ் சினிமாவில் குடும்ப கதைகளும், உறவுகளின் மேன்மைகளை சொல்லும் படங்களும் தொடர் வெற்றி பெற்று வரும் நிலையில், அந்த வரிசையில் புதிதாக இடம் பிடித்திருக்கிறது ’ராஜபுத்திரன்’ திரைப்படம். அப்பா - மகன் இடையிலான பாசப்பினைப்பை சொல்லும் படமான இதில் இளைய திலகம் பிரபு மற்றும் எதார்த்த நயகன் வெற்றி அப்பா - மகன் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். கிருஷ்ணபிரியா நாயகியாக நடிக்க, பிரபல கன்னடன நடிகர் கோமல் குமார் வில்லனாக நடித்திருக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, தங்கதுரை உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

 

கிரசண்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் கே.எம்.சபி தயாரிப்பில், மகா கந்த எழுதி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு எஐஎஸ்.னெளஃபல் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆலிவர் டெனி ஒளிப்பதிவு செய்துள்ளார். வைரமுத்து மற்றும் மோகன் ராஜன் பாடல்கள் எழுதியுள்ளனர். கலை இயக்குநராக ஐயப்பன் பணியாற்ற, ராகேஷ் ராக்கி சண்டைக்காட்சிகளை வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக டைமண்ட் பாபு பணியாற்றுகிறார்.

 

கடந்த மே 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை ’ராஜபுத்திரன்’ படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்ட சிறப்புக் காட்சியில் படம் பார்த்த பாத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியதோடு, இப்படம் மக்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். அவர்களின் கூற்றுபடி படம் தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக, ‘மாமன்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ வரிசையில் ‘ராஜபுத்திரன்’ படமும் குடும்பத்துடன் பார்க்க கூடிய நல்ல படமாக இருப்பதாக படம் பார்த்த மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

 

இந்த நிலையில், ‘ராஜபுத்திரன்’ படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக படக்குழுவினர் கவலை அடைந்துள்ளனர். காரணம், இப்படி ஒரு நல்ல படம் எடுத்தும் சரியான திரையரங்குகள் கிடைக்கவில்லை, என்பது தான். மக்களை திரையரங்குகளுக்கு வரவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பிரமாண்டமான முறையில் குடும்பத்தோடு பார்க்க கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாக மட்டும் இன்றி, தந்தை - மகன் இடையிலான பந்தத்தை கொண்டாடும் வகையில் சொல்லியிருக்கும் இப்படத்திற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தாலும், போதிய திரையரங்குகள் கிடைக்காமல் போனது பெருத்த ஏமாற்றம்.

 

இதுபோன்ற நல்ல படங்களை பார்க்க மக்கள் தயாராக இருந்தாலும், சரியான திரையரங்கம் மற்றும் காட்சிகள் ‘ராஜபுத்திரன்’ படத்திற்கு கிடைக்காமல் போனதால் ரசிகர்கள் பலர் படம் பார்க்க சென்று அப்படம் திரையரங்குகளில் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பும் சம்பவங்களும் தமிழகத்தின் பல பகுதிகளில் நிகழ்கிறது. எனவே, ’ராஜபுத்திரன்’ படத்திற்கான திரையரங்குகள் மற்றும் காட்சிகளை அதிகரிக்கப்பட்டால் இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் வரிசையில் எங்கள் படமும் நிச்சயம் இணையும், என்று படக்குழு தெரிவித்துள்ளது.

 

நல்ல படங்களை திரையரங்கிற்கு சென்று பார்க்க மக்கள் தயாராக இருந்தாலும், திரையரங்குகள் ஒதுக்குவதில் இருக்கும் அரசியல் மற்றும் சிண்டிகேட் பின்னணியால் ‘ராஜபுத்திரன்’ போன்ற படங்கள் பெரும் சிக்கலை சந்திக்கும் சூழ்நிலை மாறினால் மட்டுமே, தமிழ் திரையுலகம் மீண்டும் பொற்காலத்திற்கு திரும்பும்.

Related News

10503

இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை! - உற்சாகத்தில் ‘லோகா - அத்தியாயம் 1’ படக்குழு
Thursday September-04 2025

நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’...

’பனை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Wednesday September-03 2025

பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...

குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக ‘குமாரசம்பவம்’ உருவாகியுள்ளது - இயக்குநர் பாலாஜி வேணுகோபால்
Wednesday September-03 2025

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

Recent Gallery