’கபளீகரம்’, ’ஐ அம் வெயிட்டிங்’ மற்றும் மலையாளத்தில் ’இத்திகார கொம்பன்’ ஆகிய படங்களில் நடித்திருக்கும் தக்ஷன் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘துண்டு பீடி’.
மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சி.பியூலா மகிழ் தயாரித்துள்ள இப்படத்தில் தக்ஷன் விஜய் காவல்துறை அதிகாரி வேடத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தலைவாசல் விஜய், சாய் தீனா, வனிதா விஜயகுமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
போதை பொருட்களை விற்க்கும் ஒருவனால் பாதிக்கப்பட்ட இருவர், அவருக்கு எதிராக போராடி ஜெயித்தார்களா? இல்லையா? என்பதை மையமாக கொண்டு விறுவிறுப்பான ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5 பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...
கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...
தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...