Latest News :

இரண்டாவது முறையாக இயக்குநர் அட்லீயுடன் கைகோர்த்த நடிகை தீபிகா படுகோன்!
Saturday June-07 2025

இந்திய திரையுலகில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் முதன் முறையாக பான் வேர்ல்ட் திரைப்படமாக தயாரிக்கும் திரைப்படத்தை இயக்குநர் அட்லீ இயக்க, நாயகனாக அல்லு அர்ஜுன் நடிக்கிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை தற்காலிகமாக #AA22xA6 என்று அழைக்கப்படும் இதில், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகில் தடம் பதித்து தனித்துவமான நட்சத்திர நடிகையாக ஜொலிக்கும் தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார்.

 

சர்வதேச திரையுலகமே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் #AA22xA6 படத்தின்  அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி, இந்திய திரையுலகில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிர்வை ஏற்படுத்தியது. அத்துடன் படத்தை பற்றிய புது தகவல்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் பிரபலமான நடிகை தீபிகா படுகோன் இணைந்திருக்கிறார் எனும் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருப்பதுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.

 

ஐகான் ஸ்டார்' அல்லு அர்ஜுனின் காந்தம் போல் இழுக்கும் திரை தோற்றம் - பிரம்மாண்டத்தின் சர்வதேச அடையாளமாகத் திகழும் இயக்குநர் அட்லீ மற்றும் வெற்றிகளை தொடர்ச்சியாக வழங்கி, தனித்துவமான தயாரிப்பு நிறுவனம் என்ற நற்பெயரை சம்பாதித்திருக்கும் சன் பிக்சர்ஸ் - இவர்களுடன் திறமையான நடிப்பாலும், வசீகரமான தோற்றத்தாலும் ரசிகர்களை வசப்படுத்தியிருக்கும் தீபிகா படுகோனும் இணைந்திருக்கிறார்.‌ இதனால் இந்த படம் சர்வதேச அளவிலான திரையுலக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 

 

இந்தப் படத்தில் ஏற்கனவே சர்வதேச தரத்திலான VFX தொழில்நுட்பக் குழுவினர் இணைந்து தங்களுடைய முழுமையான பங்களிப்பை வழங்கத் தொடங்கி இருக்கிறார்கள். இந்தத் தருணத்தில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகையான தீபிகா படுகோனும் இணைந்திருக்கிறார். படக் குழுவினர் வெளியிட்டிருக்கும் இந்த புது தகவலால் ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அத்துடன் படத்தை பற்றிய அப்டேட்டுகள் இனி தொடர்ந்து வெளியாகும் என படக் குழுவினர் அறிவித்திருப்பதால்.. ரசிகர்கள் எல்லையற்ற மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க தொடங்கி இருக்கிறார்கள்.

Related News

10510

’தடயம்’ இணையத் தொடரின் சாதனை வெற்றி! - கொண்டாடி தீர்த்த ஜீ5
Saturday March-07 2026

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ஜீ5  பல்வேறு திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்கள் மூலம் பொழுதுபோக்கு சந்தையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துள்ளது...

கணிக்க முடியாத காலநிலை! - பிரியங்கா மோகனின் கொரியா அனுபவம்
Saturday March-07 2026

கார்த்திக் இயக்கத்தில், ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் வரும் மார்ச் 12 ஆம் தேதி முதல் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாக உள்ளது...

பிரமாண்டமாக நடைபெற்ற ‘டெக்ஸ்லா’ பட துவக்க விழா!
Saturday March-07 2026

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...

Recent Gallery