தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'ப்ரோகோட்- ( BroCode)' என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார்.
'டிக்கிலோனா', 'வடக்குப்பட்டி ராமசாமி ' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகும் ' ப்ரோகோட்- (BroCode)' எனும் திரைப்படத்தில் ரவி மோகன் கதையின் நாயகனாக நடிக்கிறார். நடிகர் எஸ். ஜே. சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர்களுடன் நான்கு முன்னணி நடிகைகள் நடிக்கிறார்கள். 'போர் தொழில்' படத்தில் பணியாற்றிய கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'அனிமல்', 'அர்ஜுன் ரெட்டி' போன்ற வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள, கலை இயக்குநராக ஏ .ராஜேஷ் பணியாற்றுகிறார். நகைச்சுவையுடன் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் நடிகர் ரவி மோகன் தயாரிக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இப்படத்தின் கதையை ரவி மோகனிடம் விவரித்த போது மிகவும் ரசித்தார். அத்துடன் படத்தை தயாரிக்கவும் முன்வந்தார். இப்படத்தில் ஸ்லாப்ஸ்டிக் பாணியிலான நகைச்சுவை காட்சிகள் இடம் பிடித்திருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரை அனுபவத்தை வழங்கும் '' என்றார்.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் நான்கு முன்னணி நட்சத்திர நடிகைகள் யார்? என்பது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும், படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகர் ரவி மோகன் தற்போது இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் 'பராசக்தி ' மற்றும் இயக்குநர் கணேஷ் கே . பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’...
பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...