நடிகை வனிதா விஜயகுமார் எழுதி இயக்கி நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிஸ்சஸ் & மிஸ்டர்’. இப்படத்தை வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் சார்பில் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்திருக்கிறார். வனிதாவுக்கு ஜோடியாக அவரது முன்னாள் காதலரும், நடன இயக்குநருமான ராபர்ட் நடித்திருக்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் வெளியீட்டு தேதியை நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவித்துள்ளார். அதன்படி ‘மிஸ்சஸ் & மிஸ்டர்’ படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தின் வெளியீட்டு போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினரை நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்தியுள்ளார். இந்த நிகழ்வில் ஸ்ரீநிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் படத்தை வெளியிடும் விநியோகஸ்தர்கள் மதியழகன் மற்றும் பாலா உடன் இருந்தனர்.
நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’...
பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...