Latest News :

ஈழத்தின் போராட்ட வடிவம் மாறியிருக்கிறது - ‘தீப்பந்தம்’ திரைப்பட இயக்குநர் ராஜ் சிவராஜ்
Thursday June-12 2025

ஈழத்தின் திரைப்பட கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ஈழத்தின் முழுநீளத் திரைப்படமாக உருவாகியுள்ள ‘தீப்பந்தம்’ திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி ஜூன் 11 ஆம் தேதி மாலை, சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் வ.கௌதமன், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம், ஓவியர் மருது, ஓவியர் புகழேந்தி, இயக்குநர்கள் கவிதா பாரதி, ராசி அழகப்பன், கேந்திரன் முனியசாமி, அஜயன் பாலா, நடிகர் முத்துக்காளை,  மாணவர்கள் நகலகம் சவுரி ராஜன் ஆகியோர் கலந்துக் கொண்டு, படத்தை பாராட்டி பேசினார்கள்!

 

நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்ச்சிய படத்தின் கதையாசிரியரும், இசையமைப்பாளருமான பூவன் மதீசன், “யாழ்பாணத்தில் அல்லது இலங்கையில், ஈழத்தில் திரைப்பட கலாச்சாரத்தை உருவாக்க வேண்டும் என்று ஒரு குழுவாக முயற்சித்து வருகிறோம். அதில் நாங்கள், அவர்த்தக ரீதியாக வெற்றியும் பெற்றிருக்கிறோம். கடந்த இரண்டு படங்களில் எங்களுக்கு பெரிய வெற்றி கிடைத்தது. ஆனால், முந்தைய இரண்டு படங்களை மற்ற இடங்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்றும், தமிழகத்தில் வெளியிட வேண்டும் என்றும் நாங்கள் விரும்பவில்லை. ’தீப்பந்தம்’ படத்தை தமிழகத்தில் திரையிடுவதற்கும், மற்றவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் ஏற்ற படமாக உள்ளது. இந்த படத்தில் பேசப்பட்டிருக்கும் அரசியல் இங்கிருந்தும் பேசப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த படத்தை இங்கு திரையிடுகிறோம். எங்களை பொறுத்தவரை இதெல்லாம் புதிய திரை முயற்சி தான்.

 

1990, 2000 ஆம் ஆண்டுகளில் எல்லாம் எங்கள் மண்ணில் சிறந்த திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டிருந்தன, சிறந்த பாடல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. கலையை போராட்டத்தின் யுத்தியாக பயன்படுத்தப்பட்ட மண்ணில் தான் நாங்கள் பிறந்தோம். அதன் தொடர்ச்சியாக கலையின் வாயிலாக சமூக மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்பது எங்களது பிராதான முயற்சியாக காணப்பட்டது. அதன் விளைவாக தான் இந்த படத்தை நாங்கள் எடுத்திருக்கிறோம், இதில் சில விசயங்களை சொல்ல நினைத்திருக்கிறோம். இந்த மேடையில் இருக்கும் சிறப்பு விருந்தினர்கள் எங்களை விட ஈழத்தைப் பற்றி பல விசயங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள், என்பது அவர்களை அழைக்கும் போது எங்களுக்கு தெரிந்தது. 

 

நாங்கள் அனைவரும் இரண்டாம் தலைமுறையினர், எங்களுக்கு அடுத்ததாக மூன்றாம் தலைமுறையினர் வந்திருக்கிறார்கள். அவர்களை 2கே கிட்ஸ் என்று சொல்கிறோம், அவர்களுக்கு ஈழத்தில் எதற்காக பிரச்சனை உருவானது என்பது தெரியாத சூழல் உருவாகியிருக்கிறது. எனவே, அவர்களுக்கு அதை புரிய வைக்க வேண்டும் என்ற முயற்சியாகவும், அதே சமயம் அதை ஆவணங்கள் மூலமாக அல்லாமல் ஒரு பொழுதுபோக்கு திரைப்படம் மூலம் புரிய வைக்க வேண்டும் என்ற முயற்சியாக தான் இந்த படத்தை எடுத்திருக்கிறோம்.  எனவே, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு நன்றி. இந்த படத்தை பார்த்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி.” என்று பேசினார்.

 

படத்தின் இயக்குநர் ராஜ் சிவராஜ் பேசுகையில், “எங்களது அழைப்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சென்னையில் தான் படித்தேன், 2007 ஆம் ஆண்டு விஷுவல் கம்யூனிகேஷன் படித்தேன். இந்த படத்தின் படத்தொகுப்பாளரும் இங்கு தான் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார். நாங்கள் இங்கு படித்துவிட்டு இங்கேயே படம் எடுக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. இந்த படிப்பை வைத்துக் கொண்டு எங்கள் கதைகளை, எங்கள் மண்ணில் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டோம். நான் இங்கு படிப்பு முடிந்த உடன் யாழ்பாணத்திற்கு சென்று விட்டேன், படத்தொகுப்பாளர் அருண் யோகதாசனும் படிப்பு முடிந்ததும் யாழ்பாணத்திற்கு வந்துவிட்டார். எங்கள் கதையை நாங்கள் சொல்ல வேண்டும் என்று விரும்புனோம். மற்றவர்கள் சொல்லக்கூடாது என்று இல்லை, நாங்கள் சொன்னால் உணர்ச்சிப்பூர்வமாக, உண்மையாக இருக்கும், மற்ற தாக்கங்கள் இருக்காது. இங்கு பேசியவர்கள், போராட்டம் ஓயக்கூடாது, தொடர வேண்டும் என்று சொன்னார்கள். நான் ஒரே விசயத்தை சொல்லிக் கொள்கிறேன், இந்த உலகத்தில் போராட்டங்களின் வடிவங்கள் மாறலாம், இப்போது எங்களின் போராட்டத்தின் வடிவம் மாறியிருக்கிறது, நன்றி.” என்றார்.

Related News

10514

இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை! - உற்சாகத்தில் ‘லோகா - அத்தியாயம் 1’ படக்குழு
Thursday September-04 2025

நடிகர் துல்கர் சல்மான் தனது வேய்ஃபேரரர் ஃபிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கும் படம் ‘லோகா - அத்தியாயம் 1 : சந்திரா’...

’பனை’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு
Wednesday September-03 2025

பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்...

குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக ‘குமாரசம்பவம்’ உருவாகியுள்ளது - இயக்குநர் பாலாஜி வேணுகோபால்
Wednesday September-03 2025

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது...

Recent Gallery