Latest News :

ரஜினிகாந்தின் பாராட்டால் உற்சாகமடைந்த ‘கண்ணப்பா’ படக்குழு!
Monday June-16 2025

தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்.எம்.மோகன் பாபு சென்னையில் சந்தித்துக் கொண்டனர். 

 

1995 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி வெளியான ‘பெத்தராயுடு’ திரைப்படம் சக்திவாய்ந்த கதை சொல்லல், மறக்க முடியாத நடிப்பு மற்றும் இந்தியாவின் மிக முக்கியமான இரண்டு நட்சத்திரங்களின் திரை இருப்பு ஆகியவற்றால் தெலுங்கு திரையுலக வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. 

 

‘பெத்தராயுடு’ படத்தின் 30 வது வருடத்தின் நிறைவை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்.எம்.மோகன் பாபு சென்னையில், சந்தித்துக் கொண்டு தங்களது திரை பயணத்தை கொண்டாடினர். மேலும், அதே நாளில், விஷ்ணு மஞ்சுவின் நடிப்பில் வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும், பல மொழிகளில் வெளியாக உள்ள, மகத்தான இந்திய சினிமாவின் பிரமாண்ட காவியமாக உருவாகியுள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பார்த்தார்.

 

படத்தை பார்த்துவிட்டு படத்தையும், விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டிய ரஜினிகாந்த், விஷ்ணு மஞ்சுவின் நடிப்பு, படத்தின் ஆன்மீக ஆழம், காட்சி செழுமை மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் குறித்து பாராட்டி பேசியுள்ளார். மேலும், படம் அசாதாரணமானதாக இருக்கிறது, என்றும் அவர் தெரிவித்தார். ரஜினிகாந்தின் பாராட்டால் டாக்டர்.மோகன் பாபு மற்றும் விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சியடைந்தனர்.

 

ரஜினிகாந்த் ‘கண்ணப்பா’ படத்தை பாராட்டியது குறித்து கூறிய விஷ்ணு மஞ்சு, “ரஜினி சாரின் இந்த அரவணைப்புக்காக நான் 22 ஆண்டுகளாகக் காத்திருந்தேன். இன்று, நான் அச்சமின்றி உணர்கிறேன். தடுக்க முடியாததாக உணர்கிறேன். கண்ணப்பா வருகிறார்.” என்றார்.

 

Rajinikanth and Mohan Babu

 

நடிகர் ரஜினிகாந்தின் பாராட்டு ‘கண்ணப்பா’ படக்குழுவுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்திருப்பதோடு, பெரும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.

 

வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ ஏற்கனவே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

Related News

10521

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

Recent Gallery