Latest News :

’ஜுராசிக் வேர்ல்டு : ரீபர்த்’ பற்றி மனம் திறந்த ஸ்கார்லெட் ஜோஹன்சன்!
Wednesday June-18 2025

உலக அளவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து அதரப்பினரையும் கவர்ந்து, இன்று வரை அனைத்து தரப்பின் மக்களின் பேவரைட் ஹாலிவுட் திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜுராசிக் வேர்ல்ட் ட்ரையாலாஜி’-யின் வெற்றிக்குப் பிறகு புதிய கதையுடன் மீண்டும் உருவாகியுள்ளது.

 

யுனிவர்சல் பிக்சர்ஸ் (வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி மூலம் விநியோகிக்கப்படுகிறது) ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த்தை பெருமையுடன் உங்களுக்குக் கொண்டு வருகிறது. இது 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களை மகிழ்வித்த பிரியமான தொடரின் ஒரு அற்புதமான புதிய அத்தியாயம். கேரத் எவர்ட்ஸ் (ரோக் ஒன்) இயக்கியுள்ள இப்படத்தில் அசல் ஜுராசிக் பார்க்கில் பணியாற்றிய டேவிட் கோப் எழுதிய இந்த படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், எம்மி விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட ஜோனாதன் பெய்லி, இரண்டு முறை ஆஸ்கார் விருது பெற்ற மஹெர்ஷாலா அலி மற்றும் பிரபல நடிகர்கள் ரூபர்ட் ஃப்ரெண்ட் மற்றும் மானுவல் கார்சியா-ருல்ஃபோ போன்ற பெரிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். 

 

‘ஜுராசிக் வேல்ர்ட் : ரீபர்த்’ திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி ஆங்கிலம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

ஜுராசிக் வேல்ர்ட் டொமினியன், ரீபர்த் நிகழ்வுகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கதை நடக்கிறது. இப்போது, ஒரு சில டைனோசர்கள் மட்டுமே எஞ்சியுள்ளன, அவை பூமத்திய ரேகைக்கு அருகிள் உள்ள தொலைதூர இடங்களில் வாழ்கின்றன. அவை அவற்றின் பழைய வாழ்விடங்களைப் போலவே இருக்கின்றன. மூன்று பெரிய உயிரினங்கள், நிலத்திலிருந்து ஒன்று, கடலில் இருந்து ஒன்று மற்றும் வானத்தில் இருந்து ஒன்று, மனித மருத்துவத்தை மாற்றக்கூடிய சிறப்பு மரபணுக்களைக் கொண்டுள்ளன என்ற அதிர்ச்சியூட்டும் விஷயத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் போது ஒரு ஆபத்தான பணி தொடங்குகிறது. 

 

ஸ்கார்லெட் ஜோஹன்சன் ஒரு சிக்கலான கடந்த காலத்தைக் கொண்ட ஒரு கடினமான பயணத் தலைவராக நடிக்கிறார். ஜொனாதன் பெய்லி ஒரு புத்திசாலி, ஆனால் முரண்பாடுள்ள மரபணு விஞ்ஞானியாக நடிக்கிறார். மேலும் மஹெர்ஷாலா அலி தனது சொந்த ரகசியத் திட்டங்களுடன் திறமையாக உயிர்வாழும் நிபுணராக வருகிறார். ஒன்றாக அவர்கள் அசல் ஜுராக் பார்க் இடமான ஒரு பழைய, வெற்றுத் தீவிற்குச் செல்கிறார்கள். அங்கு, அவர்கள் எஞ்சியிருக்கும் பயங்கரமான ப்ரிடேட்டர்களை எதிர்கொள்வது மட்டுமல்லாமல், அறிவியல் முன்னேற்றத்திற்கும் பேரழிவு தரும் ஆபத்துக்கும் இடையிலான கோட்டை மழுங்கடிக்கும் ஆழமான நெறுமுறை சாந்த சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

 

இந்தத் தொடரின் நீண்டகால ரசிகையான ஸ்கார்லெட் ஜோஹன்சனுக்கு டேவின் கோப்பின் கதையைக் கேட்ட உடனே பிடித்துவிட்டது. அவர் இப்படம் பற்றி கூறுகையில், “இது ஒரு உண்மையான ஜுராசிக் படம் போலவே உணர்ந்தேன். நிறைய ஆற்றல் மற்றும் பெரிய அளவில் தனிப்பட்ட ஆபத்துகளைக் கொண்ட ஒரு அற்புதமான சர்வைவல் கதை. முழு கதையையும் ஒரு பெரிய புன்னகையுடன் படித்தேன், ஏனெனில் அது மிகவும் ஆக்கப்பூர்வமாகவும், வேடிக்கையாகவும் சிறந்த நகைச்சுவையுடனும் இருந்தது.” என்றார்.

 

ஸ்கார்லெட் ஜோஹன்சன் தனது கதாபாத்திரமான ஜோராவை இன்னும் ஆழமாக ஆராய விரும்பினார். எனவே அவர் திரைக்கதை எழுத்தாளர் டேவின் கோப் உடன் இணைந்து ஜோராவின் கதையை உருவாக்கினார். ஜோஹன்சன் கூறியது, “ஜோரா ஒரு சிக்கலான கடந்த காலத்தையும் தனிப்பட்ட வலியையும் கொண்ட ஒரு கூலிப் போராளி. எனவே அவர் உண்மையில் அந்த வகையான வாழ்க்கையை வாழ்ந்தார் என்று மக்கள் நம்புவது எனக்கு முக்கியம்” என்றார். மேலும் அவர் கூறுகையில், “ஜோரா ஒரு திருப்புமுனையில் இருக்கிறார், அங்கு அவர் தனது வாழ்க்கையை மாற்றத் தயாராக இருக்கிறார் என்பதைக் காட்ட நாங்கள் விரும்பினோம். இந்த பணியில் அவருக்கு தனிப்பட்ட ஒரு ஆபத்து உள்ளது. ஜோராவின் வாழ்க்கையில் என்ன இல்லை என்பது பற்றி டேவிட்டும் நானும் நிறைய பேசினோம். அவர் மற்றவர்களுக்காக பல வருடங்களாக தியாகம் செய்து வருகிறார், இப்போது அவர் தனக்காக என்ன செய்யத் தயாராக இருக்கிறார் என்று கேட்க வேண்டிய நேரம் இது.” என்றார்.

Related News

10523

45 வது படத்தில், 46 நடிகர்களுடன் நடித்திருக்கும் ஜீவா!
Monday January-12 2026

இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

Recent Gallery