இந்திய இசைத்துறையை கடந்து, தென்னிந்திய இசைத்துறையில் சுயாதீன இசை மற்றும் பாடல்களின் வருகை அதிகரித்து வருவதோடு, ரசிகர்களிடம் கிடைக்கும் பெரும் வரவேற்பால் பல முன்னணி இசைக்கலைஞர்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் இத்தகைய சுயாதீன இசை வீடியோக்கள் மற்றும் ஆல்பங்களின் உருவாக்கத்தில் அதீத ஈடுபாடு காட்டி வருகிறார்கள். அந்த வகையில், பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமான இசை வீடியோவாக உருவாகி வருகிறது ‘கண்ணோரமே’.
ஒரு பாரம்பரிய இசைக்கலைஞராக பயிற்சி பெற்று ஏராளமான இசைக்குழுக்களுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்திய சுவாமிநாதன் ராஜேஷ், வெற்றிகரமான இசைத் தொகுப்பாளராக பணயாற்றினார். அதை தொடர்ந்து பல இசை வீடியோக்களுக்கு இசையமைத்தார். அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்ததன் மூலம் அனைத்து வயதினரின் கவனத்தையும் ஈர்த்தார்.
குறிப்பாக, ஹரிஹரன் குரலில் “நாம் போகிறோம்...”, “மேகத்தில் ஒன்றுரை நிந்த்ரோம்...”, “மின்னலை...” போன்ற பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷை இளைஞர்களின் பேவரைட் இசையமைப்பாளராக அடையாளப்படுத்தியது.

யோகி பாபு மற்றும் பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஆகியோரது நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘லோக்கல் சரக்கு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான சுவாமிநாதன் ராஜேஷ், ’கண்ணால மயக்குரியே’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பு பெற்றதன் மூலம் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இதையடுத்து ராதாரவி நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான ‘கடைசி தோட்டா’ படத்தின் மூலம் வித்தியாசமான இசையை கொடுத்து கவனம் ஈர்த்தார். அப்படத்தில் இடம்பெற்ற ”அய்யாயோ..” மற்றும் “நானும் அவலும்...” பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.
தொடர்ந்து இசைத்துறையில் அடுத்தடுத்தக் கட்டத்திற்கு பயணித்து வரும் இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ், ‘கண்ணோரமே’ என்ற தலைப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் மிக பிரமாண்டமான இசை வீடியோவை உருவாக்கி வருகிறார். இசையோடு கண்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் பிரமாண்டமான காட்சிகளோடு உருவாகி வரும் இந்த இசை வீடியோ இசையமைப்பாளராக சுவாமிநாதன் ராஜேஷுக்கு மேலும் ஒரு மகுடத்தை சூட்டுவதோடு, சுயாதீன இசைத்துறையில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...