படம் ரிலிஸிற்கு முன்பாக பல்வேறு சாதனைகளை முறியடித்த ‘மெர்சல்’ குறிப்பாக அஜித்தின் விவேகம் புறிந்து உலக சாதனையை சில குறிப்பிட்ட நாட்களிலேயே முறியடித்தது. இதையடுத்து தொடர்ந்து பலவகையில் சாதனை நிகழ்த்தி வந்த படம் தற்போது ரிலிஸிற்கு பிறகும் வசூலில் சாதனை நிகழ்த்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், படம் ரிலிஸான முதல் மூன்று நாட்களில் சென்னையில் ‘மெர்சல்’ நல்ல வசூல் செய்திருந்தாலும், ‘விவேகம்’ படத்தின் வசூலை மிஞ்சவில்லை என்று கூறப்படுகிறது.
எதிர்மறையான விமரச்னங்களை பெற்ற அஜித்தின் ‘விவேகம்’ ரிலிஸான முதல் நாளில் சென்னையில் ரூ.1.52 கோடியும், இரண்டாம் நாளில் ரூ.1.48 கோடியும், மூன்றாம் நாளில் ரூ.1.52 கோடியும் வசூல் செய்ததாம்.
’மெர்சல்’ ரிலிஸான முதல் நாளில் ரூ.1.52 கோடியும், இரண்டாம் நாளில் 1.48 கோடியும், மூன்றாம் நாளில் 1.18 கோடியும் வசூல் செய்திருக்கிறதாம். இதன் மூலம், சென்னையின் முதல் மூன்று நாட்கள் வசூலில், விஜயின் மெர்சலை அஜித்தின் விவேகம் பின்னுக்கு தள்ளியுள்ளது.
மெர்சல் படத்தின் இந்த குறைவான வசூலுக்கு, தற்போது சென்னையில் உள்ள முக்கிய மால்களில் இருக்கும் திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதே காரணம் என்றும் கூறப்படுகிறது.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...