தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.
சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ (Divine Miracles and Secrets - Part 2) புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும், ’யோகா - பாகம் 1’ (Yoga - Part 1) புத்தகம் மற்றும் ‘சுக ஞானநந்தம்’ (Suga Gnananantham) இசை ஆல்பமும் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் டாக்டர் ஏ.நஜீரூல் அமீன், பிரபல திரைப்பட நடிகர் ராமகிருஷ்ணா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மேலும், திரைப்படத்துறை, தொழில்துறை, விளையாட்டுத்துறை, விவசாயத்துறை, சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் என சுமார் 45-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி புகழ் கே.பி.ஒய் பாலா மற்றும் குக் வித் கோமாளி புகழ் மணிமேகலை ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.
இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தில் ஜீவா, தம்பி ராமையா, இளவரசு, பிரார்த்தனா நாதன், ஜெய்வந்த், ஜென்சன் திவாகர், மணிமேகலை, சர்ஜின் குமார், ராஜேஷ் பாண்டியன், சுபாஷ் கண்ணன், அமித் மோகன், அனு ராஜ், சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்...
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...