Latest News :

’பன் பட்டர் ஜாம்’ படத்தை தமிழகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்த நடிகர் விஜய்! - நாயகன் ராஜு ஜெயமோகன் தகவல்
Wednesday July-09 2025

ரெய்ன் ஆப் ஆரோஸ் (Rain of Arrows) நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பன் பட்டர் ஜாம்’. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  

 

பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நேற்று மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. . 

 

நிகழ்ச்சியில் நடிகர் ராஜூ ஜெயமோகன் பேசுகையில், “இந்த வாய்ப்பு கிடைக்கறதுக்கு முக்கியமான காரணம் பிக் பாஸ் ஷோ தான்னு நினைக்கிறேன்.. அதுக்கு வாய்ப்பு கொடுத்த பெரிய மனிதர்களுக்கும். அதுல எனக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வெச்ச அந்த மக்களுக்கு தான் நன்றி சொல்லணும்.. ஜியோ ஹாட்ஸ்டார்ல நானே எழுதி இயக்கி நடிச்சு அப்படி ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த படத்த பண்ணிட்டு இருக்கும்போதுதான் இந்த வாய்ப்பு வந்தது.. அது கொஞ்சம் லேட் ஆனதால இதை பண்ணேன். 

 

இன்றைய ஜென்-சிக்கு ஒரு டீப்பான விஷயத்தை எப்படி ஷேர் பண்ணி கொடுக்கனும்னு தெரிஞ்ச ஒரு டைரக்டர். தான் ராகவ் மிர்தாத்.. எனக்கு ஒரு கிரவுண்ட் கொடுத்திருக்கீங்க. இது ஒரு படம். இவ்வளவு பேர் பாராட்டக்கூடிய ஒரு இடத்துல நிற்க வச்சிருக்கீங்க. உங்களுக்கு நான் ரொம்ப நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த படத்தோட எடிட்டர் ஜான் ஆப்ரகாம் இன்னொரு டைரக்டர்னு சொல்லலாம். தன்னோட டேபிள்ல படத்தை வேற மாதிரி மாத்துனாரு... அதுமட்டுமல்ல இது தயாரிப்பாளர் சுரேஷ் சாரின் கதைங்கறதுனால ஈஸியா ஓகே ஆயிடுச்சு. எல்லாருமே என்னை ஹீரோன்னு சொல்றாங்க.. ஹீரோன்னா பொதுவா படத்துல அம்மாவ காப்பாத்துறவங்க, இல்ல. ஆபத்துல இருக்குறவங்களை காப்பாத்துறவங்க.. ஆனா என்னை வெச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேன்னா அன்னைக்கு நான் ஹீரோன்னு. ஒத்துப்பேன்

 

எங்க படத்தை பார்க்குறதுக்கு ஒரு நல்ல காரணம் என்ன அப்படின்னா. தேவையில்லாத விஷயங்களெல்லாம் சொல்லாம உங்களை போட்டு தொந்தரவு பண்ணாம, உங்க டைம் மதிச்சு சீக்கிரமா முடியற மாதிரியான ஒரு படம் கொடுத்துருக்கோம். ஒரு முக்கியமான விஷயத்தை ஒரு நல்ல மெசேஜா சுகர் கோட் பண்ணி உங்களுக்கு கொடுத்து கொடுத்திருக்கார் இயக்குநர். . இந்த எல்லாத்துக்குமே வந்து இசையமைப்பாளர் நிவாஸ் தான். காரணம். இந்த படம் வர்றதுக்கு முன்னாடி, நான் நடிக்கிறதுக்கு முன்னாடி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு முகம் நிவாஸ் 

 

கண்டிப்பா நீங்க குடுக்கற பணம் வேஸ்ட் ஆகாது. நீங்க எல்லாரும் போய் குடும்பம் குழந்தைகளோட நம்பி பாக்கலாம். சொல்லப்போனா  இது ஒரு மூணு ஹீரோ சப்ஜெக்ட். பப்பு, மைக்கேல், நான் எல்லாரும் சேர்ந்து நடிச்ச படம். இந்த படத்துல ஒரு குட்டி நயன்தாரா, ஒரு குட்டி அதிதி ராவ் ஹைதரி இருக்காங்க. இவங்க ரெண்டு பேருமே இந்த படத்துக்கு அப்புறம் அந்த ரெண்டு ஹீரோயின்களை விட பெருசா ஆகணும் அப்படின்னு சொல்லி வேண்டிக்கறேன். 

 

நானும் ஒரு டைரக்டர்னு. நினைக்கிறேன்ங்கறதுனால டைரக்டர்கிட்ட. அவர் சொல்றதை கீழ்ப்படிஞ்சு பண்ணி நடிக்கத்தெரியும். நான் அதை பண்ணிருக்கேன்.. இன்னைக்கு எந்த படம் ஓடும், எந்த படமும் ஓடாதுன்னு தெரியல. எந்த கதை நல்ல கதை, எந்த கதை எல்லாம் பண்ணக்கூடாதுன்னு தெரியல. ஒரு நைட்டுல எல்லாரும் என்ன வேணாலும் ஆகலாம். நாளைக்கு என்ன வேணாலும் ஆகும் அப்படின்ற மாதிரியான ஒரு இதுலதான் இருக்கு. இன்னைக்கு நீங்க பாக்குற ஒரே ஒரு புட் டெலிவரி ஆப்ல  பார்த்தா நிறைய சாப்பாடு இருக்கும். எந்த சாப்பாட நீங்க ஆர்டர் பண்ணனும்னு தெரியாது. ஆனா பன் பட்டர் ஜாம் தான் எல்லா ஊர்லயும், எல்லா கடைகளிலும் கிடைக்கும். பசிக்குதுன்னா எந்த கடையில வேணாலும் பன் பட்டர் ஜாம் நம்பி சாப்பிடலாம். நாளைக்கு இந்த சினிமா எனக்கு எதாவது கொடுத்தா திருப்பி சினிமாவுல தான் இருக்கணும்னு ஆசை.. எனக்கு படம் தயாரிக்கனும்னு விருப்பம் இருக்கு.

 

ஒருத்தர் ஒரே ஒரு போன் கால்ல எங்க படத்த தமிழ்நாட்டுல இருக்குற எல்லாரும் திரும்பி பார்க்க வெச்சாரு.. தளபதி விஜய் ஒரு போன் கால்ல எனக்கு பண்ணி கொடுத்தாரு. அவரு என்னை எப்படி பாக்குறாரு? அவருக்கு என்னை பிடிக்குமா? இல்ல என்ன விஷயத்துக்காக எனக்கு இத வாழ்த்துனார் அப்படிங்கறதெல்லாம் வந்து எனக்கு ரொம்ப பிரமிப்பாவும் இருக்கு. அவர் சொன்ன விஷயம் தான் இன்னைக்கு நிறைய பேருக்கு எங்க படம் தெரிஞ்சிருக்கு சமீபத்துல ஒரு நிகழ்வுல. அவரோட ரசிகர்களை  எல்லாம் பாத்து நீங்க எல்லாம் இல்லனா நான் என்ன பண்ண போறேன்னு தெரியலப்பா அப்படின்னாரு. நான் அவர்கிட்ட சொல்றேன் நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியலண்ணா” என்றார்.

Related News

10547

ஜெம்பிரியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் 'பாம்' திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
Saturday August-30 2025

ஜெம்பிரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”...

'யோலோ' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
Saturday August-30 2025

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S...

‘காந்தி கண்ணாடி’ மூலம் சிவகார்த்திகேயனுடன் மோதுகிறீர்களா ? - நடிகர் பாலா விளக்கம்
Friday August-29 2025

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்து, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு உதவி செய்ததால், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது...

Recent Gallery