Latest News :

என் தம்பி அறிமுகமாகும் படத்தில் நானும் ஹீரோவாகவே நடித்திருப்பது மகிழ்ச்சி - நடிகர் விஷ்னு விஷால் நெகிழ்ச்சி
Wednesday July-09 2025

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

 

நடிகை மிதிலா பால்கர் பேசுகையில், "'ஓஹோ எந்தன் பேபி' ரொமாண்டிக் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம். நிச்சயம் நீங்கள் அனைவரும் உங்களுடன் தொடர்பு படுத்தி பார்த்துக் கொள்ள முடியும். நிறைய புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். ஜூலை 11 அன்று திரையரங்குகளில் சந்திப்போம்". என்றார்.

 

நடிகை அஞ்சு குரியன் பேசுகையில், "'ஓஹோ எந்தன் பேபி' ரோம்-காம் திரைப்படம். இந்த படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறோம். நிச்சயம் நீங்கள் அனைவரும் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்". என்றார்.

 

நடிகர் ருத்ரா பேசுகையில், "ஜூலை 11 அன்று இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. கோவிட் காலகட்டத்திற்கு பிறகு அனைவருக்கும் ஒரு விதமான மன அழுத்தம் இருக்கிறது. அதை எல்லாம் போக்கி உங்களை 'ஓஹோ எந்தன் பேபி' ஜாலியாக சிரிக்க வைக்கும், கொண்டாட வைக்கும். படம் முடித்து நீங்கள் தியேட்டர் விட்டு வெளியே போகும்போது நிச்சயம் உங்கள் முகத்தில் புன்னகை இருக்கும்". என்றார்.

 

நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷால் பேசுகையில், " புதுமுக இயக்குநர்களுடன் தான் நான் நிறைய படங்கள் செய்திருக்கிறேன். ஏனெனில், அவர்களிடம் தான் ஒரு மேஜிக் இருக்கும். அந்த மேஜிக் இந்த படத்தில் இருக்கக்கூடிய அனைத்து புது முக நடிகர்களிடமும் இருக்கிறது. உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை. அது இருந்தால் அடுத்தடுத்து நிறைய புது முகங்களுக்கு நான் வாய்ப்பு கொடுப்பேன். நான் புதுமுகமாக திரையுலகில் வந்த பொழுது எனக்கு எளிதில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இன்று கடவுள் புண்ணியத்தில் பலருக்கும் வாய்ப்பு கொடுக்கும் இடத்திற்கு வளர்ந்திருக்கிறேன். உங்களுக்கு ஒரு அப்டேட்! என்னுடைய அடுத்த படம் 'கட்டாகுஸ்தி2'. 'ராட்சன்2' படமும் அடுத்த வருடம் என்னுடைய தயாரிப்பில் நிச்சயம் நடக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் படத்தை பார்த்துவிட்டு பாலிவுட் நடிகர் அமிர்கான் பாராட்டிவிட்டு கண்கலங்கினார். என் தம்பி ரொம்பவே லக்கி. என் தம்பி அறிமுகமாகும் படத்தில் நானும் ஹீரோவாகவே நடித்திருப்பது மகிழ்ச்சி" என்றார்.

Related News

10552

ஜெம்பிரியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் 'பாம்' திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
Saturday August-30 2025

ஜெம்பிரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”...

'யோலோ' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
Saturday August-30 2025

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S...

‘காந்தி கண்ணாடி’ மூலம் சிவகார்த்திகேயனுடன் மோதுகிறீர்களா ? - நடிகர் பாலா விளக்கம்
Friday August-29 2025

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்து, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு உதவி செய்ததால், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது...

Recent Gallery