Latest News :

’பல்டி’ படத்தில் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார் சாய் அபயங்கர்!
Wednesday July-09 2025

ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி  அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார். முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் பல படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், தற்போது ஷேன் நிகாமின் 25வது படமான ’பல்டி’ படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

 

இத்திரைப்படம் இயக்குநர் உன்னி சிவலிங்கம் என்பவரின் அறிமுக முயற்சியாகவும், இசைக்கும் , ஆக்‌ஷனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படமாகவும் உருவாகி வருகிறது. மேலும் வரும் திருவோண பண்டிகை வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.  இப்படம் அதிரடி ஆக்சன் களத்தில்,  பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

 

சாய் அபயங்கர் இப்படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார்  என்பது குறிப்பிடதக்கது. இதற்காக வெளியான ஒரு பிரத்யேக ப்ரோமோ வீடியோவில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு போன் கால் மூலம் சாய் அபயங்கரை மலையாள திரையுலகிற்கு வரவேற்கும் காட்சி ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது. வீடியோவின்  முடிவில் “பல்டி ஓணம்” எனும் வாழ்த்தும், சாய் அபயங்கரின் பெயர் பொறித்துள்ள “பல்டி ஜெர்ஸி”- யுடன் மோகன்லாலின் வாழ்த்தும் இடம் பிடித்திருப்பது ரசிகர்களை பரவசப்படுத்தியுள்ளது.

 

சாய் அபயங்கர் பிரபல பின்னணிப் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. யூட்யூபில் மட்டும் 200 மில்லியன் பார்வைகளை கடந்த அவரது ஆல்பம் பாடல்கள், இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

 

இப்போது மலையாள சினிமாவில் கலக்கலாக  கால் பதித்திருக்கும் சாய்,  தற்போது தமிழ் சினிமாவிலும் முன்னணி இசையமைப்பாளராக  கலக்கி வருகிறார்.  முன்னணி நட்சத்திரங்களின் படங்களான 'சூர்யா 45' (சூர்யா நடிப்பில்), ' STR 49 ' (சிலம்பரசன் நடிப்பில்), 'டூயூட்'- DUDE '(பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்), லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 'பென்ஸ்' ஆகிய படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

 

’பல்டி’ படத்தினை  தயாரிப்பாளர்கள் சந்தோஷ் T. குருவில்லா மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர், STK Frames மற்றும் Binu George Alexander Productions  நிறுவனங்கள் சார்பில் இணைந்து தயாரிக்கின்றனர். இசை மற்றும் ஆக்‌ஷனுக்கு  முக்கியத்துவம் அளித்துள்ள இப்படத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்பக் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

Related News

10560

ஜெம்பிரியோ பிக்சர்ஸ் தயாரிக்கும் 'பாம்' திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
Saturday August-30 2025

ஜெம்பிரியோ பிக்சர்ஸ் (GEMBRIO PICTURES) சார்பில் சுதா சுகுமார் மற்றும் சுகுமார் பாலகிருஷ்ணன் தயாரிப்பில், அர்ஜூன் தாஸ், ஷ்வாத்மிகா ராஜசேகர், நாசர் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, “சில நேரங்களில் சில மனிதர்கள்” புகழ் விஷால் வெங்கட் இயக்கத்தில், வாழ்வின் வினோதங்களைப் பேசும் கமர்ஷியல் எண்டர்டெய்னர் டிரமாவாக உருவாகியுள்ள “பாம்”...

'யோலோ' படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
Saturday August-30 2025

MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S...

‘காந்தி கண்ணாடி’ மூலம் சிவகார்த்திகேயனுடன் மோதுகிறீர்களா ? - நடிகர் பாலா விளக்கம்
Friday August-29 2025

தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமடைந்து, சில திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பலருக்கு உதவி செய்ததால், அவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது...

Recent Gallery