Latest News :

தொடர் தோல்விப் படங்களை கொடுக்கும் ஆர்.கண்ணனுக்கு கைகொடுக்குமா ‘இவன் தந்திரன் 2’!
Wednesday July-09 2025

இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்.கண்ணன் ‘ஜெயம் கொண்டான்’ படத்தில் தனது திரைப்பயனத்தை துவங்கி, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பூமராங்’, ‘காசேதான் கடவுளடா’ உள்ளிட்ட பல கமர்சியல் படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து, ஹன்சிகா நாயகியாக நடித்துள்ள ’காந்தாரி’ படத்தை தயாரித்து இருக்கிறார். இப்படம் இன்னும் வெளியாகாமல் பெட்டியில் தூங்கும் நிலையில், ஆர்.கண்ணன் அடுத்தடுத்த இயக்கிய பட படங்கள் தோல்விகளை தழுவிய நிலையில், அவர் தயாரித்து இயக்கும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், இயக்குநர் ஆர்.கண்ணன், தனது இயக்கத்தில் 2017ல் வெளியாகி ஓரளவு வரவேற்பு பெற்ற  ‘இவன் தந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது ‘இவன் தந்திரன்-2’ என்கிற பெயரில் தயாரித்து  இயக்குகிறார். இப்படத்தை மசாலா பிக்ஸ் (MASALA PIX) நிறுவனம் தயாரிக்கிறது.

 

‘இவன் தந்திரன்’ படத்தில் சக்தி கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக்கும் அவரது நண்பராக ஆர்.ஜே பாலாஜியும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் நடித்திருந்தனர். பிரபல பொறியியல் கல்லூரியில் ஒரு மோசமான அமைச்சரின் துணையோடு நடக்கும் முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக இப்படம் உருவாகி இருந்தது. மக்களால் பரபரப்பாக பேசப்பட்டு, சிறந்த விமர்சனங்களையும் பெற்று அதன்  தொடர்ச்சியாக உருவாகும் ‘இவன் தந்திரன் 2’ வும், அதே விறுவிறுப்பான  திரைக்கதையும் கதை களமும் அமைந்துள்ளது. தனது வேலையில் உறுதியாக இருக்கும் ஒருவன்  அதை நிறைவேற்ற அவன் என்னைன்ன செய்கிறான்  தான் என்பதே இன்றைய இளைஞகளுக்கான கதையாக அமைந்துள்ளது.

 

‘சிங்கம் 3;, ‘வடசென்னை’, ‘கேஜிஎப்’ உள்ளிட்ட படங்களில் இளம் நடிகராக நடித்து பிரபலமான நடிகர் சரண் நாயகனாக நடிக்கிறார்.  கல்லூரி மாணவரான சஷாங்க் முதன்மை  கதாபாத்திரத்தில்  அறிமுகமாகிறார்.

 

‘இந்தியன் 3’, ‘இரு துருவம்’, விரைவில் வெளியாக இருக்கும் ‘காளியன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சிந்து பிரியா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தற்போது ஜெயம் ரவியின் கராத்தே பாபு படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். சமுத்திரக்கனி வில்லனாக நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் தம்பி ராமையா, ஜெகன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 

 

தெலுங்கில் உள்ள அனைத்து டாப் ஹீரோக்களின் படங்களுக்கும் தொடர்ந்து இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ‘நம்ம ஊரு இசையமைப்பாளர்’ எஸ்.எஸ்..தமன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். 

 

தற்போது ‘இவன் தந்திரன் 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக தனது படங்களிலேயே ஓரளவு வெற்றி பெற்ற படமான ‘இவன் தந்திரன்’ படத்தின் இரரண்டாம் பாகத்தை, ’இவன் தந்திரன் 2’ என்ற தலைப்பில், வளரும் கலைஞர்களை வைத்து படமாக்கும் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.கண்ணனுக்கு இப்படம் கைகொடுக்குமா?, என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Related News

10561

பிரமாண்டமாக நடைபெற்ற ‘டெக்ஸ்லா’ பட துவக்க விழா!
Saturday March-07 2026

தமிழ் சினிமாவின் முக்கியமான தயாரிப்பாளராக உருவெடுத்துள்ள கண்ணன் ரவி, ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் மூலம் மிகப்பெரிய வெற்றி கொடுத்திருக்கும் நிலையில், தற்போது தனது கண்ணன் ரவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் பல படங்களை தயாரித்து வருகிறார்...

அரசியல் கட்சி மாநாடு போல் நடந்த ‘லீடர்’ பட டீசர் வெளியீட்டு விழா!
Saturday March-07 2026

லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்கும் 'லீடர்' படத்தின் டீசர் வெளியீட்டு கொண்டாட்டம் சென்னை கமலா திரையங்கில் வியாழக்கிழமை படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் பங்கேற்க விமரிசையாக நடைபெற்றது...

சினிமா இன்று பெரும் பிரச்சனையில் இருக்கிறது - இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் வருத்தம்
Saturday March-07 2026

அறிமுக இயக்குநர் எஸ். லதா கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மரகதமலை’...

Recent Gallery