Latest News :

என் கேரியரில் ’டிரெண்டிங்’ மிக முக்கியமான படமாக இருக்கும்! - நடிகர் கலையரசன் நம்பிக்கை
Friday July-11 2025

ராம் ஃபிலிம் பேக்டரி சார்பில், தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் தயாரிப்பில், இயக்குநர் சிவராஜ் இயக்கத்தில், கலையரசன், பிரியாலயா நடிப்பில், இன்றைய சோஷியல் மீடியா உலகின் முகத்தைக் காட்டும், பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள படம் ’டிரெண்டிங்’. பிரேம்குமார் பெசன்ட் ரவி, வித்யா போர்கியா, ஷிவன்யா பிரியங்கா, கௌரி, பாலாஜி தியாகராஜன் தயாளன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

 

பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு செய்துள்ள இப்படத்தின் கலை இயக்குநராக அருண் பணியாற்றியுள்ளார்.  குட்டி ரேவதி மற்றும் கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளனர்.

 

வரும் ஜூலை 18 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. 

 

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் மீனாட்சி ஆனந்த் பேசுகையில், “டிரெண்டிங் திரைப்படம் எங்களின் சின்ன முயற்சி, நீங்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டுகிறேன். கலையரசன் மிகச்சிறந்த நடிகர் அவருக்கு இணையாக பிரியாலயா நன்றாக நடித்துள்ளார்.  இயக்குநர் சிவராஜ் இந்தக்கதையைச் சொன்ன போதே, எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. சாம் சிஎஸ் சிறப்பான இசையை தந்துள்ளார். ஒளிப்பதிவாளர் பிரவீன் சிறப்பாகச் செய்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

ஒளிப்பதிவாளர் பிரவீன் பேசுகையில், “நானும் மீடியாவிலிருந்து வந்தவன். இங்கு ஒளிப்பதிவாளராக மேடையேறி இருப்பது மகிழ்ச்சி. நானும் சிவராஜும் சேர்ந்து குறும்படங்கள் வேலை பார்த்துள்ளோம். நான் பொள்ளாச்சி போன போது, சிவராஜ் சொன்ன கதை தான் இது. சிவராஜ் இதை டெவலப் செய்த பின்னர் கலையரசன் அண்ணாவிடம் கதை சொன்னோம். கதை கேட்டவுடன் அவர் இந்த கதாபாத்திரம் செய்ய ஆசைப்படுவதாகச் சொன்னார் அப்படித்தான் இப்படம் ஆரம்பித்தது. சாம் சிஎஸ் இசை இந்தப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது. இந்த படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

 

நடிகர் பிரேம் குமார் பேசுகையில், “இந்தப்படம் டைட்டில் கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது, டைட்டிலை மாற்றி விடாதீர்கள் அப்போது தான் டிரெண்டிங்கில் இருக்கும் என்று சொன்னேன்.  ஆன் லைன் கேம்ஸ் உச்சத்துக்குப் போனால் என்ன ஆகும் என்பதை இப்படம் பேசியுள்ளது. கலையரசன் தம்பி தான் எனக்கு போன் செய்து, இந்தக் கேரக்டர் செய்ய வேண்டும் என்றார். கலையரசன், பிரியாவுடன் நடித்தது நல்ல அனுபவம். இயக்குநர் சிவராஜ் அதிர்ந்து கூட பேச மாட்டார். இந்தப்படம் ஷூட்டிங் நல்ல அனுபவமாக இருந்தது. சாம் சிஎஸ் இசையில் அசத்தியுள்ளார். இந்தப்படம் பார்த்து, அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நிர்வாகத் தயாரிப்பாளர் ஶ்ரீகாந்த் பேசுகையில், “ஒரு மதிய வேளையில், கலையரசன் அண்ணா கூப்பிட்டிருந்தார், அப்போது பேச்சு வாக்கில் ஆரம்பித்த படம், அங்கு ஆரம்பித்த படம், கலையரசன், பிரியா, சிவராஜ் எல்லோரின் உழைப்பில் இங்கு வந்துள்ளது. உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். வரும் ஜூலை 18 ஆம் தேதி திரைக்கு வருகிறது ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

நடிகர் பெசண்ட் ரவி பேசுகையில், “இப்படத்தை 20 நாட்களில் ஒரு வீட்டுக்குள் எடுத்துள்ளார்கள், ஆனால் முடிந்த அளவு மிகச்சிறப்பாக, மிக அழகாக எடுத்துள்ளனர். நாம் எத்தனை படம் செய்தாலும் டிரெய்லர் பார்க்கும் போது, அந்தப்படம் நன்றாக வந்துள்ளதா? எனத் தெரிந்துவிடும். இப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. சாம் சிஎஸ் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். ஒளிப்பதிவாளர் கலக்கியுள்ளார். சின்ன இடத்தில் லைட் செய்வது கடினம் ஆனால் அழகாகச் செய்துள்ளார். கலையரசன் சின்ன கேரக்டரில் நடித்துக்கொண்டிருக்கும் போது இருந்து தெரியும், இப்போது அவரது படங்கள் பார்க்கும் போது அவர் நடிப்பைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது. கலக்கி வருகிறார். இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும். நிறை குடம் தளும்பாது எனச் சொல்வார்கள், அது போலத் தான் இயக்குநர் சிவராஜ். மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது.  படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

Trending

 

நடிகர் அலெக்ஸாண்டர் பேசுகையில், “நண்பர் ஹரி தான் இந்தப்பட வாய்ப்பை வாங்கித் தந்தார். நான் சினிமாவில் மிகவும் தாகமுள்ள நடிகன். என் ஆசைக்கு மிக நல்ல கதாபாத்திரத்தை இயக்குநர் சிவராஜ் தந்துள்ளார். முகம் வராத ஒரு கேரக்டர். எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு அழகான தத்துவத்தை இந்தப்படம் மூலம் பேசியுள்ளார் இயக்குநர். சாம் சிஎஸ் இசைக்கு நான் ரசிகன், இந்தப்படத்தில் நானும் பங்கு பெற்றது மகிழ்ச்சி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.” என்றார்.

 

இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசுகையில், “சின்னப்படம் பெரிய படம் என எதுவுமே இல்லை, ஜெயிச்ச படம் ஜெயிக்காத படம் அவ்வளவு தான். இப்போது ஜெயித்துள்ள படங்கள் எல்லாம் சின்ன படங்கள் தான். கலையரசன் தான் முதலில் கால் பண்ணி, இந்தப்படம் பற்றி சொன்னார். இதில் இரண்டு பேர் மட்டும் நடிப்பதாகச் சொன்னார். கதை முழுதாகக் கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. நாம் இப்போது எல்லோரும் ஆன்லைனில் அடிமையாகி, லைக்குக்காக காத்திருக்கிறோம். இந்தப்படம் ஆன்லைன் மோகத்தை, அது எப்படி மனுஷனை மாத்துகிறது என்பதை அழுத்தமாகப் பேசியுள்ளது. அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இயக்குநர் சிவராஜ் இதற்கு முன்னால் போலீஸில் இருந்துள்ளார். எல்லோரும் ஐடியில் இருந்து வருவார்கள், இவர் போலீஸில் இருந்து வந்துள்ளார். அவருக்கு சினிமா தாகம் இருக்கிறது. கதையாக இப்படம் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. நாம் நேரில் தினசரி சந்திக்கும் மனிதர்களின் வாழ்வைச் சொல்கிறது. எல்லோரும் அருமையாக பெர்ஃபார்ம்ஸ் செய்துள்ளார்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் சிறப்பாக செய்துள்ளானர். அனைவரும் படத்தை ரசிப்பீர்கள் என நம்புகிறேன். நன்றி.” என்றார்.

 

நடிகை பிரியாலயா பேசுகையில், “டிரெண்டிங் படம் வரும் 18 ஆம் தேதி திரைக்கு வருகிறது. என் தாய் தந்தைக்கு நன்றி. படக்குழுவிற்கு நன்றி. இப்படம் ஆடிசன் முடிந்த போது சந்தோசத்தை விட பயம் தான் அதிகம் இருந்தது. ஆக்டிங் ஸ்கோப் உள்ள படம், கலையரசன் சார் கூட நடிக்க வேண்டும். இது ஒரு எமோசனல் ரோலர் கோஸ்டர். இப்படத்தில் நடித்தது உண்மையில் மிக நல்ல அனுபவம். பெயரிலேயே கலைக்கு அரசன் என வைத்துள்ளார். உண்மையில் அவர் கலைக்கு அரசன் தான். இப்படத்திற்கு  சாம் சிஎஸ் மிக அற்புதமாக இசையமைத்துள்ளார். இசையோடு படம் பார்க்க அருமையாக உள்ளது. அனைத்து கலைஞர்களும் மிகச்சிறப்பாக உழைத்துள்ளனர். சோஷியல் மீடியா யூஸ் பண்ற எல்லோரும் பார்க்க வேண்டிய படம். உங்களை இருக்கை நுனியில் அமர வைக்கும், நன்றி.” என்றார்.

 

இயக்குநர் சிவராஜ் பேசுகையில், “இந்த இடத்திற்கு வர முக்கியமான காரணம் பிரவீன் தான், நான் ஊரில் இருக்கும் போது, ஷார்ட் ஃபிலிம் எழுதிக்கொண்டிருந்தேன், பிரவீன் உதவியால் தான் அந்தப்படம் நடந்தது. அது தான் சினிமாவுக்கு வர காரணமாக இருந்தது. இந்தக்கதை பிரவீனிடம் சொன்ன போது அவர் கலையரசனிடம் அழைத்துப் போனார், ஒன்லைன் சொல்லி உடனே ஓகே ஆகிவிட்டது. இது சோஷியல் மீடியா தம்பதி பற்றிய கதை. நான் மினிமிலிஸ்ட் படம் செய்யலாம் எனத் தான் ஆரம்பித்தேன் ஆனால் கலையரசன், சாம் சிஎஸ் என பெரிய படம் ஆகிவிட்டது. சாம் சிஎஸ் அனுபவம், திறமை இப்போது திரையில் பார்க்கும்போது தெரிகிறது. நாங்கள் இந்தப்படம் செய்யும் போது, 22 படங்கள் அவர் கையிலிருந்தது. இந்தப்படம் செய்ததற்கு நன்றி. தயாரிப்பில் முழுமையாக எனக்கு ஆதரவு தந்தார்கள், எனக்கு உறுதுணையாக இருந்த ஶ்ரீகாந்த் அவர்களுக்கு நன்றி. இது உருவாக்கத்தில் சின்ன படம் ஆனால் பேசும் விசயத்தில் பெரிய படம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன், மக்கள் மனதில் நிற்கும் என நம்புகிறேன். நன்றி.” என்றார்.

 

நடிகர் கலையரசன் பேசுகையில், “என் கேரியரில் இப்படம் மிக முக்கியமான படமாக இருக்கும். நான் ஹீரோவாக பல படங்கள் செய்துள்ளேன் அதில் இது வெற்றிப்படங்களில் ஒன்றாக இருக்கும். வேறொரு படம் செய்வதாக ஆனந்த் அண்ணாவுடன் பேசிக்கொண்டிருந்தோம், சிவராஜ் இந்தக்கதை சொன்ன போது எல்லோருக்கும் பிடித்தது. அவரை நோலன் என்று தான் எல்லோரும் கூப்பிடுவோம். அவரைப்பார்த்தால் போலீஸில் இருந்தவர் போலவே தெரியாது. மிகத்திறமையானவர். குறைந்த ஆர்டிஸ்ட் வைத்து 2 மணி நேரம் உட்கார வைப்பது ஈஸியான விசயமில்லை, அதை சிவராஜ் செய்துள்ளார். மியூசிக் கேமரா, நடிப்பு எல்லாம் சேர்ந்து தான் ஒரு சினிமாவில் மேஜிக் நடக்கும்.  சாம் சிஎஸ் மிக பிஸியாக இருந்தார், ஆனால் நாங்கள் கேட்டதற்காகச் செய்து தந்தார்.  பிரவீன் அவரோட சொந்தப்படம் போல அக்கறை எடுத்துக்கொண்டு செய்தார். இருவரால் இப்படத்தில் மேஜிக் நடந்துள்ளது. அலெக்ஸ் இதில் முகமில்லாமல் ஒரு அருமையான பாத்திரம் செய்துள்ளார். முகமே தெரியாமல் இருந்தாலும் நடித்தற்கு நன்றி. தயாரிப்பு தரப்பு முழு நம்பிக்கை வைத்தார்கள் அவர்களுக்கு நன்றி. நண்பன் ஶ்ரீகாந்த் இப்படம் முழுமையாக முக்கிய காரணம் அவனுக்கு நன்றி.  தயாரிப்பில் முழு வேலையும் பார்த்தார். என் மனைவி பிரியா தான் உடை அலங்காரம் செய்துள்ளார் அவருக்கு நன்றி. இது கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். கண்டிப்பாக "டிரெண்டிங்" நல்ல படமாக இருக்கும் நன்றி.” என்றார்.

Related News

10567

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

திரைப்பட தயாரிப்பில் இறங்கிய 'நாய்ஸ் அண்டு கிரைன்ஸ்'!
Saturday July-12 2025

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’!
Saturday July-12 2025

‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery