இயக்குநர் ராமின் இயக்கத்தில், மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருக்கும் ‘பறந்து போ’ திரைப்படம் கடந்த 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘பறந்து போ’ படத்தின் மாபெரும் வெற்றியை படக்குழுவினருடன் விநியோகஸ்தர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கொண்டாடியுள்ளார்.
உலகெங்கிலும் ‘பறந்து போ’ திரைப்படத்தை வெளியீடு செய்த ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் ராகுல் தனது அலுவலகத்தில் படக்குழுவினரை அழைத்து கேக் வெற்றி படத்தின் வெற்றியை கொண்டாடினார்.
இக்கொண்டாட்டத்தில் இயக்குநர் ராம், நடிகர்கள் சிவா, கிரேஸ் ஆண்டனி மற்றும் மாஸ்டர் மிதுல் ரியான் ஆகியோருடன் ஜியோ ஹாட்ஸ்டாரின் பிரதீப் மில்ராய் பீட்டர், ஜிகேஎஸ் ப்ரோஸ் புரொடக்ஷன்ஸின் கருப்புச்சாமி மற்றும சங்கர், இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, எடிட்டர் மதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். பட வெற்றியைக் கொண்டாடும் வகையிலான இந்த நிகழ்வில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...
விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...