சர்ச்சையில் சிக்கியுள்ள ‘மெர்சல்’ படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள நடிகர் கமல்ஹாசன், இன்று நடிகர் விஜயுடன் சேர்ந்து ‘மெர்சல்’ திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ தீபாவளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் மணி குறித்த வசனங்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, சம்மந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும், என்றும் கூறினார்கள்.
இதையடுத்து, காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு தயாராக இருப்பதாக அறிவித்த நிலையில் நடிகர் கமல்ஹாசன், காட்சிகளை நீக்க வேண்டியதில்லை என்று கூறியதோடு, விஜய்க்கும் மெர்சல் படக்குழுவினருக்கும் தனது ஆதரவை தெரிவித்தார். அதேபோல் இயக்குநர்கள் பா.ரஞ்சித், கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் மெர்சல் படத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், இன்று மெர்சல் திரைப்படத்தை பார்த்து மகிழ்ந்தார். அவருடன் நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர்கள் முரளி மற்றும் ஹேமா ருக்மணி ஆகியோர் உடன் இருந்தார்கள்.
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...