Latest News :

’கே.டி. - தி டெவில்’ அனைவருக்கும் பிடித்த மாஸ் ஆக்‌ஷன் படமாக இருக்கும் - துருவ் சர்ஜா நம்பிக்கை
Saturday July-12 2025

கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான  KVN Productions வெங்கட் கே.நாராயணா தயாரிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில், ஆக்சன் பிரின்ஸ் துருவ் சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி நடிப்பில் பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள திரைப்படம் *கேடி தி டெவில் ( KD The Devil ). 

 

பான் இந்திய வெளியீடாகப் பல மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படக்குழுவினர் தமிழ்ப்பதிப்பை விளம்பரப்படுத்தும் வகையிலும் தமிழ்ப்பதிப்பின் டீசரை அறிமுகப்படுத்தும் வகையிலும், சென்னையில் தமிழ் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில் படக்குழு சார்பில் நாயகன் துருவ் சர்ஜா, நாயகி ரீஷ்மா, நடிகை ஷில்பா ஷெட்டி, நடிகர் சஞ்சய் தத், இயக்குநர் பிரேம் மற்றும் தயாரிப்பாளர் சுப்ரீத் கலந்துகொண்டனர். 

 

படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களுக்குப் படத்தின் டீசரைத்  திரையிட்டுக்காட்டினர். பின்னர் அவர்களுடன் உரையாடி, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். 

 

நிகழ்ச்சியில் இயக்குநர் பிரேம் பேசுகையில், “எனக்குத் தமிழ்ப் படங்கள் மிகவும் பிடிக்கும்.  கேடி ஒரு வித்தியாசமான படம், 1970 களில் நடந்த உண்மைச் சம்பவம் தான் இப்படம், டீசர் பார்த்திருப்பீர்கள், படத்தின் களம் புரிந்திருக்கும். டீசர் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட சஞ்சய் தத் சாருக்கு நன்றி.  இந்தப்படம் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும், நான் தர்ஷனுடன் ஜோகையா செய்யும் போதிலிருந்து சென்னையில் தான் டப்பிங், சிஜி எல்லாம் செய்து வருகிறோம். துருவ் சர்ஜா இப்படத்தில் கலக்கியிருக்கிறார். அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.” என்றார்.

 

நடிகர் சஞ்சய் தத் பேசுகையில், “சென்னையில் இருப்பது மகிழ்ச்சி. தமிழ்ப்படங்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். லோகேஷ் இயக்கத்தில் நடித்துள்ளேன், ரஜினி சாருடன் நான் நிறைய இந்திப் படம் நடித்துள்ளேன்.  கமல் சார் படங்களும் பிடிக்கும். கேடி படத்தைப் பொறுத்தவரை மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. படக்குழுவினர் என்னை மிக அன்போடு பார்த்துக்கொண்டார்கள், இது அட்டகாசமான மாஸ் ஆக்சன் படம், துருவ் சர்ஜா நன்றாக நடித்துள்ளார், அனைவருக்கும் படம் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.” என்றார்.

 

நடிகை ஷில்பா ஷெட்டி பேசுகையில், “சென்னைக்கு மீண்டும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. உங்களைப் பார்க்க சந்தோசமாக உள்ளது. மிஸ்டர் ரோமியோ ஷூட்டிங் போது தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கற்றுக்கொண்டேன். கேடி படம் பொறுத்தவரை சூப்பரான எமோசன் இருக்கிறது, சூப்பரான ஸ்டார்ஸ், சூப்பர் இயக்குநர் இருக்கிறார்கள், நிறைய உழைத்திருக்கிறோம். படத்தைக் கண்டிப்பாகத் தமிழ் ரசிகர்களும் ரசிப்பார்கள், இது அழகான மாஸ் ஆக்சன் படம். எல்லோரும் பாருங்கள் நன்றி.” என்றார்.

 

நடிகை ரீஷ்மா பேசுகையில், “எங்களின் கேடி பட டீசரை உங்களுடன் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி. இது வெறும் டீசர் தான் படத்தில்  இன்னும் பல ஆச்சரியம் இருக்கிறது. சஞ்சய் தத் சார், துருவ் சார், ஷில்பா மேடமுடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். துருவ் ரொம்ப சப்போர்ட்டாக இருந்தார். நிறைய டிப்ஸ் தந்தார். இப்படத்தை நீங்கள் பார்த்துப் பாராட்டுவதைக் கேட்க ஆவலுடன் உள்ளேன்.” என்றார்.

 

நடிகர் துருவ் சர்ஜா பேசுகையில், “எல்லோருக்கும் வணக்கம், இது என் 6 வது படம், டீசர் எல்லோருக்கும் பிடித்திருக்குமென நம்புகிறேன். இந்தப்படத்தில் சான்ஸ் தந்த பிரேம் சார், தயாரிப்பாளர் சுப்ரீத், வெங்கட் சாருக்கு நன்றி. எங்கள் குடும்பத்துக்கே ஃபேவரைட்டான சஞ்சய் தத் சார் இந்தப்படத்தில் நடித்ததற்கு நன்றி. ரவிச்சந்திரன் சார், ரமேஷ் அரவிந்த் சார் நடித்துள்ளார்கள். ஷில்பா ஷெட்டி மேடம் இன்னும் அப்படியே இளமையாக உள்ளார். அட்டகாசமாக நடித்துள்ளார். இது நல்ல மாஸ் மசாலா படம் அனைவருக்கும் பிடிக்கும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் சுப்ரீத் பேசுகையில், “மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்தத் திரைப்படத்தை எங்களிடம் கொண்டுவந்த பிரேம் சாருக்கு நன்றி. இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட நட்சத்திரங்களுக்கு நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.” என்றார்.

 

ஆக்‌ஷன் பிரின்ஸ் துருவா சர்ஜா நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், ரீஷ்மா நாயகியாக நடித்துள்ளார். சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி குந்த்ரா, ரமேஷ் அரவிந்த், நோரா ஃபதேஹி மற்றும் V ரவிச்சந்திரன் ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். 

 

"கேடி - தி டெவில்" 1970களில் இருந்த  பெங்களூர் நகரின்  தெருக்களுக்குப் பார்வையாளர்களை மீண்டும் கூட்டிச் செல்லும் வகையில், இது வரலாற்றில் நிகழ்ந்த  ஒரு பரபரப்பான சம்பவத்தை மீண்டும் கண்முன் கொண்டுவரவுள்ளது. பீரியட் டிராமாவுடன் ஆக்சன் கலவையில், முன்னணி நட்சத்திரங்களின் பங்கேற்பில், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களுள் ஒன்றாக ரசிகர்களிடம் பெரும் ஆவலைத் தூண்டியுள்ளது.

 

கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் வெங்கட் கே.நாராயணா வழங்கும் "கேடி - தி டெவில்"  படத்தை பிரேம் இயக்கியுள்ளார். பான்-இந்தியா பன்மொழி திரைப்படமாக உருவாகும் இப்படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

Related News

10573

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery