Latest News :

ஜாக்கி சானின் மகள் எட்டா ஏற்படுத்திய சர்ச்சை!
Sunday October-22 2017

உலக புகழ் பெற்ற ஹாலிவுட் நடிகரான ஜாக்கி சானின், மகள் எட்டா, தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

தனது பெண் தோழியான ஆண்டி ஆட்டம் என்பவருடன் சேர்ந்து தான் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள எட்டா, புகைப்பட செய்தியாக, “நாங்கள் இருவரும் லெஸ்பியனாக வாழ்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

 

எட்டாவின் இத்தகைய பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் அளித்துள்ள எட்டா, “என் மீது அன்பும் அளவற்ற ஆதரவும் தருபவராக ஆண்டி ஆட்டம் இருக்கிறார். எங்கள் உறவு பற்றி ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொல்வார்கள் எனத் தெரியவில்லை. பலர் பாசிட்டிவாக எடுத்துக் கொள்கிறார்கள். சிலர் கேலி பேசுகிறார்கள். நான் எதிர்மறை சூழலில் வளர்ந்தவள். நான் லெஸ்பியன் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன்.” தெரிவித்துள்ளார்.

 

எட்டாவின் தோழியான ஆண்டி ஆட்டம், கனடா நாட்டைச் சேர்ந்தவர். புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளரான அவர், தற்போது ஹாங்காங்கில் வாழ்கிறார்.

 

எட்டாவின் இத்தகைய நடவடிக்கையால் பெரும் வருத்தப்படும் ஜாக்கி சான், யாரிடமும் பேசாமல் மெளனமாக இருப்பதோடு, வீட்டிலேயே அடைபட்டு கிடக்கிறாராம்.

Related News

1058

மதுரையில் நடைபெற்ற ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா!
Tuesday April-28 2026

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...

கிருஷ்ண ஜன்மபூமியில் வெளியான ’கிருஷ்ணாவதாரம்’ டிரைலர்
Monday April-27 2026

கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...

‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Monday April-27 2026

ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...

Recent Gallery