ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் ருத்ரா!
Thursday July-17 2025

திரையுலகில் ஒரு புதிய நட்சத்திரம் மலர்வதை பார்க்கும் அந்த இனிமை மிகச் சிறப்பு வாய்ந்த ஒன்று. அது காதலும், நகைச்சுவையும், நேசமும் நிரம்பிய திரைப்படத்தில் நிகழும்போது, அதற்கு ஒரு மாயாஜாலம் போன்ற உணர்வு ஏற்படுகிறது. தமிழ் சினிமா எப்போதும் புதிய திறமைகளை விரிவான அன்போடு ஏற்கும் சிறப்பைக் கொண்டது. அந்த அன்பைப் பெரும் வரவேற்புடன் பெற்று கொண்டிருக்கிறார் நடிகர் ருத்ரா, இவர் கடந்த வாரம் வெளியான ‘ஓஹோ எந்தன் பேபி’ என்ற நகைச்சுவையான காதல் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி, ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளார்.

 

ருத்ராவின் இயல்பு வாய்ந்த வசீகரம், வெள்ளந்தியான முகபாவனைகள், நேர்த்தியான நடிப்பு ஆகியவை, குறிப்பாக பெண்கள் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது திரையிடையிலான இயல்பு மற்றும் நடிப்பிற்கான அர்ப்பணிப்பு, நம்பிக்கையைத் தூண்டும் புதிய ஓர் எழுச்சியாக பாராட்டப்பட்டு வருகிறது. இத்தனை ஆதரவையும் உற்சாகத்தையும் சந்திக்கும் இந்த இளம் நடிகர் தன் கண்களில் கண்ணீர் வைக்கும் அளவுக்கு நெகிழ்ந்துள்ளார்.

 

முதல் படத்தின் அனுபவம் மற்றும் வெற்றி குறித்து கூறிய நடிகர் ருத்ரா, “ஒரு நடிகனாக இந்த அளவுக்கு அன்பும் ஆதரவும் பெறுவது மிகவும் நெகுழ்ச்சியான தருணம் . என் அண்ணன் விஷ்ணு விஷால் அவர்களின் ரசிகர்களிடம் எவ்வளவு நெருக்கமாக இருப்பாரோ , அதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் அதை நானே உணர்வது இதுவே முதல் முறை. உண்மையிலேயே இது ஒரு மாயாஜாலம் போலிருக்கிறது. தமிழ் ரசிகர்கள் புதியவர்களை அவர்கள் இதயத்தில் இருந்து உண்மையான அன்புடன் வரவேற்கிறார்கள். 'ஓஹோ எந்தன் பேபி'க்கு கிடைக்கும் பாராட்டுகள் என் மனதை நெகிழ வைக்கின்றன. இந்த கதாபாத்திரத்தை எனக்குக் கொடுத்து எனக்கு இது போன்ற வாய்ப்பை தந்த இயக்குநர் கிருஷ்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தக் கதாபாத்திரம் எனக்குள் பல உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு அருமையான வாய்ப்பாக இருந்தது , சவால்களுடனும் சந்தோஷத்துடனும். என் கனவுகளை ஊக்குவித்த என் அப்பா மற்றும் அண்ணனுக்கும், என் சகநடிகர்கள்  அனைவருக்கும் என் நன்றிகள். திரைப்படத் துறையிலிருந்தும், ரசிகர்களிடமிருந்தும், ஊடகங்களிடமிருந்தும் கிடைத்துள்ள அன்பு, எனது எதிர்கால படைப்புகளில் சிறப்பாக வேலை செய்ய வேண்டிய ஆர்வத்தையும் தன்னம்பிக்கையையும் தருகிறது.” என்றார்.

 

இளமையான காதல் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘ஓஹோ எந்தன் பேபி’யை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் இணைந்து வழங்குகின்றனர். இப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்; தயாரிப்பாளர்களாக ராகுல் மற்றும் விஷ்ணு விஷால் பணிபுரிந்துள்ளனர். குட் ஷோ நிறுவனத்தின் கேவி துரை மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பாக ஜாவித் இணைத் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

 

இந்த திரைப்படத்தின் பரபரப்பான நட்சத்திரப் பட்டியலில் மிதிலா பால்கர், அஞ்சு குரியன், மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், கீதா கைலாசம், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு, நிர்மல் பிள்ளை, நிவாஷினி கிருஷ்ணன், அருண் குரியன், விஜயசாரதி, கஸ்தூரி, மற்றும் வைபவி டாண்ட்லே ஆகியோர் உள்ளனர்.

 

ஜென் மார்டின் இசையமைப்பிலும், ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவிலும், ஆர்சி பிரணவ் தொகுப்பிலும் உருவான இந்த திரைப்படம், நம்மை கவரும் இனிமையும், உணர்வுமிக்க திரை அனுபவத்தையும் வழங்குகிறது. படம் முடிந்தவுடன் ஒரு இனிய புன்னகையோடு வெளியே போவதற்கான காரணமாக ‘ஓஹோ எந்தன் பேபி’ அமைந்துள்ளது.

Related News

10581

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது...

நடிகர் விக்ரமின் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிட்டெட் நிறுவனம், அடுத்த தயாரிப்பை அறிவிப்பதில்   பெருமை கொள்கிறது...

ஆகஸ்ட் 8 ஆம் தேதி ’பாய் - ஸ்லீப்பர் செல்ஸ்’ வெளியாகிறது!
Thursday July-17 2025

ஒரு வித்தியாசமான முயற்சியாக மூன்று மதத் தலைவர்கள் இணைந்து ஒரு திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டனர்...

Recent Gallery