Latest News :

கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ரேவதி நடிக்கும் புதிய படம் அறிவிப்பு!
Thursday July-17 2025

தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்துவரும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘புரொடக்சன்-10’ என பெயரிடப்பட்டுள்ள புதிய படம் தயாராகிறது. உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இயக்குநர் கே.எஸ்.அதியமான் இந்தப் படத்தை இயக்குகிறார்.  மிகச்சிறந்த நடிப்பால் படத்திற்கு உயிரூட்டும் நடிகை ரேவதி இந்தப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

நடிகர் விதார்த், லிஜோ மோல் ஜோஸ், அர்த்தனா பினு என பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தில், சஞ்சித், அபிராமி என்கிற இளம் ஜோடியும் அறிமுகமாகின்றனர். இயக்குநர்கள் ராஜ்கபூர் மற்றும், மகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். குழந்தை நட்சத்திரம் ஸ்ரீலயா இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

 

இசையமைப்பாளர் டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவியரசு ஒளிப்பதிவு செய்ய, சுதர்ஷன் படத்தொகுப்பு செய்கிறார். சினேகன் பாடல்கள் எழுத, சிவா யாதவ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.  மக்கள் தொடர்பாளராக ஏ.ஜான் பணியாற்றுகிறார்.

 

படம் பற்றி இயக்குநர் கே.எஸ்.அதியமான் கூறுகையில், “ஒரு அம்மா – பையன், ஒரு கணவன் - மனைவி, ஒரு காதல் இவற்றை சுற்றி நடக்கின்ற உண்மைக்கு நெருக்கமான கதை, இது அனைவராலும் உணர்ப்பூர்வமாக இந்த கதையை தங்களுடன் தொடர்பு படுத்தி பார்த்துக்கொள்ள முடியும். என்னுடைய படங்கள் எல்லாமே உண்மைக்கு மிக நெருக்கமாகத்தான் இருந்திருக்கின்றன. இந்த கதை உண்மையாகவே இருக்கும்” என்றார்.

Related News

10588

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery