சர்ச்சையில் சிக்கிய விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு திரையுலக பிரமுகர்கள் பலர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் ஆதரவு தெரிவித்திருப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அது போலியான ரஜினிகாந்த் டிவிட்டர் பக்கம் என்று தெரிய வந்தது.
இதையடுத்து, நடிகர்கள் பலர் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், மவுனம் காப்பது ஏன்? என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு ரஜினிகாந்த் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ‘மெர்சல்’ படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார்.
“மிக முக்கிய பிரச்சனையைப் படத்தில் பேசியுள்ளார்கள், சிறப்பாக உள்ளது! மெர்சல் படக்குழுவிற்கு வாழ்த்துகள்!” என்று ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Important topic addressed... Well done !!! Congratulations team #Mersal
— Rajinikanth (@superstarrajini) October 22, 2017
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...