Latest News :

’ச்சீ ப்பா தூ...’ இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
Monday July-21 2025

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுத்தில்,  சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...' வீடியோ இசை ஆல்பம் பாடலை  கமல்ஹாசன் பாராட்டியதுடன் அக்குழுவினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

 

இன்றைய இளம் தலைமுறையினரிடையே இன்டிபென்டன்ட் இசை ஆல்பங்கள் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. சமீபத்தில் தமிழின் முன்னணி இளம் இசையமைப்பாளர்களில் ஒருவரான தரண்குமார் இசையில், இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் எழுத்தில் வெளியான,   'ச்சீ ப்பா தூ...' பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

 

இப்பாடலின் வீடியோ ஆல்பத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் பாடலினால் கவரப்பட்டு, அக்குழுவினரை அழைத்து பாராட்டியதுடன், அவர்களுக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். கமல்ஹாசனின் பாராட்டினால் இக்குழுவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.

 

இலங்கையில் மிகவும் பிரபலமான ராப் பாடகரும் இன்டிபென்டன்ட் இசை கலைஞருமான வாஹீசன் ராசய்யாயின் திறமையால் ஈர்க்கப்பட்ட  தரண் குமார், இந்த புதிய ஆல்பம் பாடலில் அவருக்கு வாய்ப்பளித்து,  அவருடன் இணைந்து இப்பாடலை உருவாக்கியுள்ளார்.  

 

இப்பாடலை முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் வாஹீசன் ராசய்யா ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இந்த பாடலுக்கு சக்திவேல் நடன அமைப்பை செய்துள்ளார், மாஸ்டர் ராஜூ சுந்தரம் நடனமாடியிருக்கிறார். இந்த வீடியோ இசை ஆல்பத்தை இயக்குநர் அனந்து இயக்கியிருக்கிறார்.

 

தரண் குமரின் தனித்துவமான இசை, அற்புதமான பாடல் வரிகள்,  ராப், துடிப்பான நடனம்  என இப்பாடல் இசை ரசிகர்களை ஈர்த்து வருகிறது.  இசை ரசிகர்கள் இப்போது இப்பாடலை கொண்டாடி வருகிறார்கள்.

Related News

10594

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery