Latest News :

3 வருட உழைப்பு, 250 நாட்களுக்கு மேலான படப்பிடிப்பு! - கவனம் ஈர்க்கும் ‘காந்தாரா - சாப்டர் 1’ மேக்கிங்
Tuesday July-22 2025

’கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’ போன்ற மாபெரும் வெற்றி படங்கள் மூலம் இந்திய திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், சாதனை படைப்புகளை தயாரிக்கும் நிறுவனமாகவும் பார்க்கப்படும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் மற்றொரு பிரமாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது ‘காந்தாரா - சாப்டர் 1’. ஹோம்பலே ஃபிலிம்ஸ் நிறுவன திரைப்படங்களில் மிகவும் லட்சியமான திரைப்பட முயற்சிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இப்படம் இந்திய சினிமாவின் மைல்கல்லாக அமைந்த திரைப்படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த நிலையில், ‘காந்தாரா - சாப்டர் 1’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து, படத்தின் மேக்கிங் வீடியோவை ஹாம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் பின்னணியில் உள்ள காவிய தன்மையின் அளவையும், அதற்கான கடினமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சியையும் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவமாக இந்த வீடியோ வழங்குகிறது.

 

படப்பிடிப்பு நிறைவடைந்ததைக்கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், 250 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பின் உச்சக்கட்டத்தை விவரிக்கிறது.  மேலும் இது மூன்று ஆண்டுகளுக்கும் மேலான அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். ஆயிரக்கணக்கானவர்கள் இப்படத்தின் தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் அயராது உழைத்திருப்பதால்.. இந்த மேக்கிங் வீடியோ - நடிகர் மற்றும் இயக்குநரான ரிஷப் ஷெட்டியின் கதை சொல்லலை வரையறுக்கும் ஆர்வம் மற்றும் துல்லியத்திற்கு சமர்ப்பணமாக அமைந்திருக்கிறது.

 

படத்தின் பின்னணியில் பணியாற்றிய படைப்புத் திறன் மிக்க குழுவில் இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் - ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பாளர் தினேஷ் வங்காளன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.‌ இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து படத்தின் சக்தி வாய்ந்த காட்சி மொழி மற்றும் உணர்வு பூர்வமான கதையை நேர்த்தியாக வடிவமைத்துள்ளனர். 

 

 

அக்டோபர் 2 ஆம் தேதியன்று உலக அளவில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், கன்னடம் , இந்தி,  தெலுங்கு, மலையாளம், பெங்காலி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. அதே தருணத்தில் அதன் கலாச்சார மையத்தில் வேரூன்றி பல்வேறு மொழிகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களையும் சென்றடையும். 

 

நாட்டுப்புற கதைகள், மக்களின் நம்பிக்கை மற்றும் அற்புதமான சினிமா திறமைசாலிகள் ஒன்றிணைந்து கொண்டாடும் ஒரு ஆழமான அனுபவத்தை வழங்க இருக்கும் ‘காந்தாரா - சாப்டர் 1’ உடன் ஹோம்பாலே ஃபிலிம்ஸ் இந்திய சினிமாவின் எல்லைகளை கடந்து செல்ல இருக்கிறது.

Related News

10596

’சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்’ உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படமாக இருக்கும் - நடிகர் வெற்றி நம்பிக்கை
Monday July-21 2025

நடிகர் வெற்றி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சென்னை ஃபைல்ஸ் - முதல் பக்கம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது...

’ச்சீ ப்பா தூ...’ இசை ஆல்பத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!
Monday July-21 2025

இளம் இசையமைப்பாளர் தரண் குமார் இசையில், பிரபல ராப் இசை கலைஞரான  வாஹீசன் ராசய்யா எழுத்தில்,  சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியீடாக வெளியாகியுள்ள 'ச்சீ ப்பா தூ...

Recent Gallery