வார் 2 படத்தில் எண் 25-க்கு மிகுந்த முக்கியத்துவம் உள்ளது. இந்திய சினிமாவின் இரு பெரிய நட்சத்திரங்களான ஹ்ரித்திக் ரோஷனும், ஜூனியர் என்டி ஆரும் ஒரே படத்தில் இணைத்து, ஆதித்யா சோப்ரா ஒரு வரலாற்று சாதனையை படைத்துள்ளார். இந்த படம் யஷ் ராஜ் ஸ்பை யூனிவர்ஸ் வரிசையில் இணைகிறது. இந்த படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார்.
இந்த வருடத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஜூனியர் என்டிஆரும் தங்களின் சினிமா வாழ்க்கையின் 25வது ஆண்டை அடைந்துள்ளனர் . இதனை கொண்டாடும் விதமாக யஷ் ராஜ் நிறுவனம் இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமான ’வார் 2’ படத்தின் டிரைலரை வருகின்ற ஜூலை 25 ஆம் தேதியன்று வெளியிடுவதாக இன்று அறிவித்துள்ளனர்.
ஹ்ரித்திக் மற்றும் என்.டி.ஆர் ஆகியோரது இந்திய சினிமாவுக்கான பங்களிப்பை பாராட்டும் விதமாக யஷ் ராஜ் நிறுவனம் டிரைலர் வெளியீட்டு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் பதிவிட்டபடி,"2025ம் ஆண்டில் இந்திய சினிமாவின் இரண்டு அடையாளங்கள் தங்களின் சிறப்பான 25 ஆண்டு சினிமா பயணத்தை நிறைவு செய்கின்றனர். வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நிகழும் இந்த தருணத்தை கொண்டாட, வார் 2 பட ட்ரைலர் வருகின்ற ஜூலை 25ம் தேதியில் வெளியாகிறது!" என பகிர்நதுள்ளனர் .
’வார் 2’ திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வருகின்ற ஆகஸ்ட் 14 ஆம் தேதியன்று உலகளவில் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இதில் கியாரா அத்வானி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'டீசல்'...
’ஈட்டி’ மற்றும் ‘ஐங்கரன்’ படங்களை இயக்கிய இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது படத்தை விஷாலே இயக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது...
அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் மற்றும் ‘பிரமலு’ புகழ் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’...