Latest News :

ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் மூலம் மீண்டும் திரைபயணத்தை தொடங்குகிறார் அபாஸ்!
Friday July-25 2025

90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார். இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ்குமாருடன் இணைந்து, தற்போது பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அபாஸ்.

 

இப்படம், பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். இதனை ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக உள்ளார். ‘லவ் டுடே’ புகழ் இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனின் முன்னாள் உதவியாளர் மரியா ராஜா இலஞ்செழியன் இப்படத்தை இயக்குகிறார்.

 

‘லவர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி மக்களை கவர்ந்த ஸ்ரீ கௌரி பிரியா, கதாநாயகியாக நடிக்கிறார்.

 

இது ஒரு நகைச்சுவை நிரம்பிய குடும்பக் கொண்டாட்டப் படம் எனக் கூறப்படுகிறது. அனைத்து வயதினரையும் கவரும் படமாக உருவாகுகிறது.

 

ஜஸ்டின் பிராபகரன் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்கிறார், செல்வா.ஆர்.கே படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பிரவேண் ராஜா ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் பிற தகவல்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

10606

‘கேப்டன் பிரபாகரன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Friday July-25 2025

புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...

’சக்தித் திருமகன்’ படம் மூலம் அரசியல் புரோக்கரான விஜய் ஆண்டனி!
Friday July-25 2025

விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...

காதல் பிளஸ் திரில்லர் ஜானர் படமாக உருவாகியுள்ள ‘அந்த 7 நாட்கள்’!
Friday July-25 2025

தமிழ் சினிமாவில் சில மறக்க முடியாத தலைப்புகளில் ‘அந்த 7 நாட்கள்’-ளும் ஒன்று...

Recent Gallery