தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழின் புகழ்மிகு இயக்குநர் ஏ.பி.நாகராஜனுக்குப் பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராண படங்களும் வரவில்ல எனும் ஏக்கத்தை போக்கும் வகையில் இப்படம் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கு அருமைமிகு படைப்பாக உருவாகியுள்ளது.
ராகுகேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக இப்படத்தில் சொல்லப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி துர்கையாகவும், விக்னேஷ் மகா விஷ்ணுவாகவும் நடித்துள்ளனர். மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தினை அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கும் வகையில் U சான்று வழங்கப்பட்டுள்ளது.
கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார் கலைமாமணி கே.பி.அறிவானந்தம். இயக்குந்ர தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் சாந்தி பாலசுந்தரம் தமிழரசன் தியேட்டர் சார்பில் தயாரிக்க, எஸ்.ஆனந்த், வி.உமாதேவி இணை தயாரிப்பு செய்துள்ளனர்.
தொழில் நுட்ப குழுவில் மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் பரணிதரன் பின்னணி இசையமைத்துள்ளார், கிட்டாரிஸ்ட் சதானந்தம் மூன்று பாட்டுகளுக்கு இசை அமைத்துள்ளார், எடிட்டிங் பணிகளை பி.லெனின் மேற்கொண்டுள்ளனர்.
இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வெளியாகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...