‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் மணி சம்மந்தமான வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக பா.ஜ.க, அப்படக் குழுவினருக்கு மிரட்டல் விடுத்தது. இதையடுத்து, விஜய்க்கு ஆதரவாக திரையுலக பிரபலங்கள் குரல் கொடுத்ததோடு, பல அரசியல் தலைவர்களும் குரல் கொடுத்தனர்.
இதனால், பா.ஜ.க-வின் எதிர்ப்பு வலுஇல்லாமல் போனதோடு, எச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் போன்றவர்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
இதற்கிடையே, ஜோசப் விஜய் என்ற நடிகர் விஜய் கிறிஸ்தவர். இந்துக்கள் மட்டுமே தமிழர்கள் என்று எச்.ராஜா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது இத்தகைய கருத்துக்கும் பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விஜயின் தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில், விஜயை நான் பள்ளியில் சேர்க்கும் போது, மதம், ஜாதி ஆகிய இடங்களில் இந்தியன் என்று தான் போட்டேன். இன்னமும் அப்படியே தான் இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், யார் என்ன தான் கண்டனம் தெரிவித்தாலும், தொடர்ந்து விஜயை சீண்டிக்கொண்டிருக்கும் எச்.ராஜா ஜோசப் விஜய் என்ற நடிகர் விஜயின் அடையாள அட்டையை வெளியிட்டு, “உண்மை கசக்க தான் செய்யும்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Truth is bitter pic.twitter.com/woFdxOntRn
— H Raja (@HRajaBJP) October 22, 2017
அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...