பிரபல இசை நிறுவனமான சரிகம படத்தயாரிப்பு, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பு வரிசையில் யூடியூப் தொடர் தயாரிப்பிலும் கோலோச்சி கால் பதித்திருக்கிறது. உங்கள் முன்னாள் காதலியும், உங்கள் மனைவியும் அலுவலக நண்பர்களாக இருந்தால்? அந்த முன்னாள் காதலி உங்கள் வீட்டிற்கு வந்து தங்கினால் என்ன நடக்கும், என்ற கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் யூடியூப் குறுந்தொடர் தான் 'லவ் ரிட்டர்ன்ஸ்'.
கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த இந்த குறுந்தொடர் 12 எபிசோடுகளாக ’சரிகம டைஸ் டிவி ஷோஸ் தமிழ் யூடியூப்’ சேனலில் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.
முன்னாள் காதலியாக பிரபல சின்னத்திரை தொடரான ’கயல்’ புகழ் நடிகை சைத்ரா ரெட்டியும், அன்பு மனைவியாக ’கனா காணும் காலங்கள் 2’ புகழ் பர்வீனும், இருவருக்கும் இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் கணவனாக பிரபல ’ஆஃபீஸ்’ தொடரின் கதாநாயகன் குரு லஷ்மண் நடிக்கின்றனர்.
சரிகம நிறுவனம் சார்பாக பிரின்ஸ் இமானுவேல் தயாரிக்க, கதை - சரிகம கதை இலாகா எழுதியுள்ளது. நிதி நிர்வாகத்தை ராம்குமார்.எம் கவனிக்க, எம்.பிரேம் ஆனந்த் மார்க்கெட்டிங் பணியை கவனிக்கிறார். தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக குமார்.சி பணியாற்ற, தொடரை சதாசிவம் செந்தில்ராஜன் மற்றும் அர்ஜுன்.டிவி இயக்குகிறார்கள்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...