Latest News :

திகில் கதைகளை ஆய்வு செய்யும் தம்பதியின் திகில் பயணமாக உருவாகியுள்ள ‘இன்ஃபிளுன்செர்’!
Monday August-04 2025

இங்கிலாந்து நாட்டு ஆங்கில திரைப்படமாக உருவாகியிருக்கும் ‘இன்ஃபிளுன்செர்’ உண்மையான திகில் எது ? என்பதை விவரிக்கும் பரபரப்பான சஸ்பென்ஸ் திரில்லர் மற்றும் திகில் படமாகும். ஒரு தம்பதியினர் அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக இலங்கையின் பழைய திகில் கதைகளை ஆய்வு செய்ய பயணம் மேற்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் பயணம் ஒரு காட்டுக்குள் சிக்கிக் கொள்ளும் பொழுது பயங்கரமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.  உள்ளூர் குடும்பத்தால்  மீட்கப்பட்ட அவர்கள், உண்மையான திகில், மனித இயல்பின் இருளில் தான் இருக்கிறது, என்பதை கண்டுபிடிக்கிறார்கள்.

 

இங்கிலாந்தைச் சேர்ந்த ஃப்ளோரன்ஸ் சிம்ப்சன் கதாநாயகியாகவும், மால்டாவை சார்ந்த டேன் ஹாலண்ட் நாயகனாகவும், இலங்கை நடிகர்களான துளிகா மரப்பனா, பிரியங்கா அமர்சிங், வனிதா சேனாதிராஜா, தேவ அலோசியஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

 

நீரோ கில்பர்ட் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சிவசாந்தகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுஜித் ஜெயக்குமார் படத்தொகுப்பு செய்திருக்கிறார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த இந்த மூன்று தமிழர்களும் தற்போது இங்கிலாந்து குடிமகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தயாரிப்பு நிர்வாகியாக ஞானதாஸ் காசிநாதர் பணியாற்ற, நிர்வாக தலைமையாக செல்லையா சுதர்ஷன் பணியாற்றுகிறார். வி.எஸ்.சிந்து கலை இயக்குநராகவும், பிபின் ஆண்டனி கலர் கிரேடிங் பணியையும் கவனித்துள்ளனர். 

 

எட்டெர்னல் ஐகான் பிலிம்ஸ் மற்றும் நியூ பிச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தின் முதன்மை தயாரிப்பை ஹரிசங்கர், ஜனார்த்தனம் (இந்தியா), விதுசன் ஆண்டனி (ஜாப்னா) ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.  இணை தயாரிப்பை ராபின் ஏ.டவுன்செண்ட் (இங்கிலாந்து) கவனித்துள்ளார். 

 

Influncer

 

முதன்மை தயாரிப்பாளர்களுள் ஒருவரான ஹரிசங்கர் ஜனார்த்தனம் பிரபல ஒளிப்பதிவாளர் ஜி. பி கிருஷ்ணாவிடம் உதவி ஒளிப்பதிவாளராகவும், இயக்குனர் மிஷ்கின் அழைப்பில் புகைப்படக் கலைஞராக 35 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ள இவர், இந்த ஆங்கிலப் படத்தில் முதன்மை தயாரிப்பாளராக தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு.  புகைப்படக் கலைஞராகவும், கேஃபராகவும், பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மலையக மற்றும் ஈழத்தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பங்கேற்றுள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related News

10612

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery