Latest News :

இசைஞானியிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்
Saturday August-09 2025

பிரபல இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷின் சுயாதீன இசை பாடல்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், தற்போது மிகப்பெரிய பொருட்செலவில் இசை ஆல்பம் பாடலை  பிரமாண்டமாக உருவாக்கியுள்ளார். ‘கண்ணோரமே’ என்ற தலைப்பில் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த ஆல்பம் வீடியோ பாடலில் சத்யா, சாம்ஸ், வினோதினி, அம்பானி சங்கர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். சைந்தவி மற்றும் வி.வி.பிரசன்னா பாடியுள்ள இந்த பாடல் பாண்டிச்சேரி, சென்னை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. 

 

ஒரு பாரம்பரிய இசைக்கலைஞராக பயிற்சி பெற்று ஏராளமான இசைக்குழுக்களுடன் இணைந்து பல இசை நிகழ்ச்சிகளை நடத்திய சுவாமிநாதன் ராஜேஷ், வெற்றிகரமான இசைத் தொகுப்பாளராக பணயாற்றினார். அதை தொடர்ந்து பல இசை வீடியோக்களுக்கு இசையமைத்தார். அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்ததன் மூலம் அனைத்து வயதினரின் கவனத்தையும் ஈர்த்தார்.

 

குறிப்பாக, ஹரிஹரன் குரலில் “நாம் போகிறோம்...”, “மேகத்தில் ஒன்றுரை நிந்த்ரோம்...”, “மின்னலை...” போன்ற பாடல்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷை இளைஞர்களின் பேவரைட் இசையமைப்பாளராக அடையாளப்படுத்தியது. 

 

யோகி பாபு மற்றும் பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஆகியோரது நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற ‘லோக்கல் சரக்கு’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான சுவாமிநாதன் ராஜேஷ், ’கண்ணால மயக்குரியே’ படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை மிகப்பெரிய வரவேற்பு பெற்றதன் மூலம் முன்னணி இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இதையடுத்து ராதாரவி நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான ‘கடைசி தோட்டா’ படத்தின் மூலம் வித்தியாசமான இசையை கொடுத்து கவனம் ஈர்த்தார். அப்படத்தில் இடம்பெற்ற ”அய்யாயோ..” மற்றும் “நானும் அவலும்...” பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்தது.

 

தொடர்ந்து இசைத்துறையில் அடுத்தடுத்தக்  கட்டத்திற்கு பயணித்து வரும் இசையமைப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ், ‘கண்ணோரமே’ஆல்பம் பாடலை இசையோடு கண்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் பிரமாண்டமான காட்சிகளோடு இளைஞர்கள் மனம் கவரும் வகையில் உருவாக்கியுள்ளார்.

 

‘கண்ணோரமே’ ஆல்பம் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றிருக்கும் நிலையில், இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ், சமீபத்தில் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். சுவாமிநாதன் ராஜேஷ் இசைத்துறையில் தொடர்ந்து பல வெற்றிகளை குவிக்க வேண்டும் என்று இசைஞானி இளையராஜா வாழ்த்து தெரிவித்து, அவரது பாடல்கள் மற்றும் ‘கண்ணோரமே’ இசை ஆல்பத்தையும் பாராட்டியுள்ளார்.

Related News

10615

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery