Latest News :

நடிகர் துல்கர் சல்மானின் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!
Sunday August-10 2025

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி இருக்கும் 'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது. மனதிற்கும் செவிக்கும் இன்பம் சேர்க்கும் வகையில்  ஆர்டி பர்மன் மற்றும் எம்.எஸ். விஸ்வநாதனின் கோல்டன் மெலோடிஸூக்கு மாடர்ன் ஹார்ட்பீட் சேர்த்து இன்றைய தலைமுறையினரும் ரசிக்கும்படி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஜானு சாந்தர்.

 

'மரியான்' படத்தில் 'எங்க போன ராசா...' உள்ளிட்ட ஹிட் பாடல்களைக் கொடுத்த பாடலாசிரியர் குட்டி ரேவதி உணர்வுப்பூர்வமான ஆழமான பாடல் வரிகளை இதில் கொடுத்துள்ளார். கூடுதல் பாடல் வரிகளை சிவம் மற்றும் தீபக் கார்த்திக் குமார் எழுதி, இந்தப் பாடலுக்கு மேலும் அழகூட்டியுள்ளனர். 

 

பிரதீப் குமார் மற்றும் என்கே பிரியங்காவின் உணர்ச்சிப்பூர்வமான குரல்கள் இந்தப் பாடலின் ஆன்மாவாக அமைந்துள்ளது. இவர்களின் மென்மையான குரலுக்கு துல்கர் சல்மான் மற்றும் பாக்யஸ்ரீ போர்ஸ் திரையில் ஜோடி சேர்ந்துள்ளனர். ரொமான்ஸ், பாஸ் கிதார், வயலின் என இந்தப் பாடலின் ரிதம் சரியான வகையில் அமைந்துள்ளது. 

 

செல்வமணி செல்வராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ராணா டகுபதி, துல்கர் சல்மான், பிரஷாந்த் பொட்லூரி மற்றும் ஜாம் வர்கீஸின் ஸ்பிரிட் மீடியா, வேஃபேரர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. செப்டம்பர் 12, 2025 அன்று 'காந்தா' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 

 

தொழில்நுட்பக்குழு விவரம்:

 

ஒளிப்பதிவு: டேனி சான்சே லோப்ஸ்,

படத்தொகுப்பு: லெவிலின் அந்தோணி கோன்சால்வஸ்,

கலை இயக்கம்: ராமலிங்கம்,

இசை: ஜானு சாந்தர்,

எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: சாய்கிருஷ்ணா கட்வால், சுஜாய் ஜேம்ஸ்,

லைன் புரொடியூசர்: ஸ்ரவன் பலபர்தி,

கூடுதல் வசனம் & கதை ஆலோசனை: தமிழ்ப்பிரபா,

கூடுதல் திரைக்கதை: தமிழ்ப்பிரபா & ஸ்ரீ ஹர்ஷா ராமேஸ்வரம்,

கதை மேற்பார்வை: ஸ்ரீ ஹர்ஷா ராமேஸ்வரம்,

ஆடை: புஜிதா தடிகொண்டா, அர்ச்சனா ராவ், ஹர்மன் கெளர்,

டிஐ கலரிஸ்ட்: கெலென் டெனிஸ் காஸ்டினோ,

ஒலி வடிவமைப்பு: அல்வின் ரெகோ,

VFX: டெக்கான் ட்ரீம்ஸ்,

மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்.

Related News

10619

தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும் தான் ‘பராசக்தி' - சிவகார்த்திகேயன்!
Friday January-09 2026

தமிழ் திரையுலகில் முன்னணி வசூல் நாயகனாக வலம் வரும் நடிகர் சிவகார்த்திகேயன், பல்வேறு ஜானர்களில் தனது அபாரமான நடிப்புத் திறனை நிரூபித்துள்ளார்...

’ஜன நாயகன்’ பட வழக்கின் தீர்ப்பு நாளை காலை வழங்கப்படுகிறது!
Thursday January-08 2026

விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியாகாது, என்று தயாரிப்பு தரப்பு நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டது...

50 வது வருடத்தில் மீண்டும் படம் இயக்கும் கே.பாக்யராஜ்!
Wednesday January-07 2026

நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், இன்று (ஜனவரி 7) தனது 73 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்...

Recent Gallery