Latest News :

பரபரப்பான திகில் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘நறுவீ’!
Monday August-11 2025

அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கத்தில், ஷரீஷ் சினிமாஸ் சார்பில் ஏ.அழகு பாண்டியன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘நறுவீ’. மலைவாழ் மக்களின் நலன்களை பற்றி பேசும், திகில் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தயாரிப்பாளர் அழகு பாண்டியன் தயாரித்துள்ளார்.

 

அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், சமூக அக்கறை கருத்துக்களுடன்,  ரொமான்ஸ் காமெடி,  கலந்து பரபரப்பான திகில் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள ‘நறுவீ’ படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், படத்தை வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

 

மருத்துவம் படித்து முடித்துவிட்டு, தற்போது சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் ஹரீஷ் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.  இவருடன்  வின்சு, வி.ஜே.பப்பு, பாடினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, காதே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

 

போக்குவரத்து வசதிகள் இல்லாத மலை கிராமங்களில் பெரும் சிரமத்துக்கு இடையே ஒரு நல்ல கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இரவு பகல் பாராமல் படக்குழு பணியாற்றி இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறது. இத்திரைப்படம் சென்னை ஊட்டி குன்னூர் போன்ற இடங்களில் மொத்தம் 60 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. 

 

எஃப் ஐ ஆர் திரைப்படத்தின் மூலம் சிறப்பான இசையை தந்த அஸ்வத், நறுவீ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இத்திரைப்படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆனந்த் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, சுபராக்.எம் படத்தொகுப்பு செய்துள்ளார். சி.கே.சக்திவேல் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். புகழேந்தி கோபால், சங்கவி.ஜி.வி பாடல்கள் எழுதியுள்ளனர். மணி மதன் பி.ஆர்.ஓ-வாக பணியாற்றுகிறார்.

 

ஆகஸ்ட் 29 ஆம் தேதி வெளியாகும் ‘நறுவீ’-யின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை பாஸ்கர் சினிமா கம்பெனி மற்றும் ஷிவானி ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் பெற்றுள்ளன. 

Related News

10623

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery