மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், வயதாகிவிட்ட தங்களுக்கு அவர் பராமரிப்புக்கு தொகை வழங்க வேண்டும், என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால் இந்த வழக்கில் உண்மை இல்லை. எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கதிரேசன், நடிகர் தனுஷ் எனது மகன்தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று கூறி இருந்தார்.
இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் சோதித்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், நடிகர் தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்போது கதிரேசன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்...
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் டி ஜி தியாகராஜன் வழங்க, செந்தில் தியாகராஜன் - அர்ஜுன் தியாகராஜன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி - நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தலைவன் தலைவி' திரைப்படம் ஜூலை 25ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது...
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...