Latest News :

நவீன கால தம்பதிகளின் உறவைப் பேசும் ‘மதர்’!
Thursday August-21 2025

ரிசார் எண்டர்பிரைசஸ் (RESAR Enterprises) வழங்கும் தயாரிப்பாளர் ரேஷ்மா தயாரிப்பில், சரீஷ் இயக்கி, நாயகனாக நடிக்க, தம்பி ராமையா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ’மதர்’. இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில், வரும் செப்டம்பர் மாதம்  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

 

இன்றைய நவீன காலகட்டத்தில் கணவன் மனைவி  உறவு சிக்கலனாதாக மாறியுள்ளது. ஒரு சிறு சந்தேகம், ஒரு நல்ல உறவையும் கெடுத்துவிடும். நவீன கால தம்பதிகளின் உறவுச்சிக்கலை மையப்படுத்தி, ஒரு அழகான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. 

 

எழுத்தாளர் ரூபன் கதை வசனம் எழுதியுள்ளார்.  பிரபல இயக்குநர் வின்செண்ட் செல்வா,  இப்படத்தின் திரைக்கதை எழுதியிருப்பதுடன் தயாரிப்பு மேற்பார்வை பணிகளையும் செய்துள்ளார்.  

 

குடும்பத்தோடு அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில், ஒரு அழகான கமர்ஷியல் படமாக,  இப்படத்தை இயக்கியிருப்பதுடன் நாயகனாகவும் நடித்துள்ளார் சரீஷ். மேலும் அடுத்தடுத்து மேலும் பல சிறப்பான படங்களை இயக்கி நடிக்கவுள்ளார். 

 

இப்படத்தில் சரீஷ் நாயகனாக நடிக்க, அர்திகா நாயகியாக நடித்துள்ளார். நடிகர் தம்பி ராமையா இதுவரை ஏற்றிராத புதுமையான பாத்திரத்தில்,  சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் அசத்தலான நடிப்பை வழங்கியுள்ளார். 

 

இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் கொடைக்கானலில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம்  உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். 

 

வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஆர்.தேவராஜ் இசையமைத்திருக்கிறார். சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்ய, கே.யு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளார். விஜய் ஜாக்குவார் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, மக்கள் தொடர்பு பணியை மணி மதன் கவனிக்கிறார்.

Related News

10631

மார்ச் 6 ஆம் தேதி வெளியாகும் ‘யார்ரா அந்த பையன் நான் தான் அந்த பையன்’!
Wednesday March-04 2026

அறிமுக இயக்குநர் பால்ராஜ் எழுதி இயக்கி, கதையின் நாயகனாக நடித்திருப்பதோடு, பி...

5 இயக்குநர்கள் இயக்கியிருக்கும் ‘வெளவல்ஸ்’ (Vowels)!
Tuesday March-03 2026

காதலின் பல்வேறு பரிமாணங்களை பேசும் தனித்துவமான படம் ‘வெளவல்ஸ்’ (Vowels)...

சுரேஷ் சங்கையாவின் படத்தில் நடித்தது பாக்கியமாக பார்க்கிறேன் - யோகி பாபு நெகிழ்ச்சி
Tuesday March-03 2026

ஜியோ ஹாட் ஸ்டார் வழங்க ஆர். ரமேஷ் பாபு மற்றும் ஜெகன் பாஸ்கரன் இணைந்து தயாரித்து இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள திரைப்படம் "கெணத்த காணோம்...

Recent Gallery