Latest News :

உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படம்! - ‘இந்திரா’ வை கொண்டாடும் பெண் பார்வையாளர்கள்
Saturday August-23 2025

உள்ளூர் சினிமாவில் தொடங்கி, உலகளவிலான சினிமா வரை வெகுஜன மக்களை ஈர்க்கும் மிக முக்கியமான ஜானர் திரில்லர் மற்றும் திகில் மட்டுமே. இவை இரண்டிலுமே வழக்கமான கதைகளை கையாண்டாலும், அவற்றை மிக ஆர்வத்துடன் பார்க்கும் பார்வையாளர்கள், அவற்றில் புதிய உத்தியை பயன்படுத்தி, கதை சொல்லல் மற்றும் காட்சியமைப்புகளில் வித்தியாசத்தை வெளிப்படுத்தினால், அத்தகைய படங்களை மக்கள் கொண்டாட தவறியதில்லை. அந்த வரிசையிலான ஒரு படமாக பார்வையாளர்களை கவர்ந்திருக்கிறது ‘இந்திரா’.

 

’இந்திரா’ என்ற தலைப்பும், அதில் நாயகனாக நடித்திருக்கும் வசந்த் ரவியும் தான், இப்படத்தின் முதல் ஈர்ப்பாளர்கள். காரணம், 2017 ஆம் ஆண்டு வெளியான ‘தரமணி’ படம் மூலம் நாயகனாக அறிமுகமான வசந்த் ரவி, நினைத்திருந்தால் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கலாம், ஆனால் படங்களின் எண்ணிக்கையை விட, தரம் தான் முக்கியம் என்பதில் தீவிரம் காட்டுபவர் கதை தேர்வில் மிக கவனமாக பயணித்து வருகிறார். அவரது அத்தகைய பயணம் தான், தற்போது வசந்த் ரவி படங்கள் என்றாலே, விசயம் இருக்கும் படமாகத்தான் இருக்கும், என்ற நம்பிக்கையை சினிமா ரசிகர்கள் மனதில் விதைத்திருக்கிறது.

 

அந்த வகையில், வசந்த் ரவியின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் ‘இந்திரா’ திரைப்படம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. குறிப்பாக, இரத்த வெள்ளத்தில் நனையும் காட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கிரைம் திரில்லர் படமாக அல்லாமல், உணர்வுப்பூர்வமான கிரைம் திரில்லர் படமாக இருக்கிறது, என்று படம் பார்த்த பெண்கள் கூறியிருப்பது படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்.

 

படம் வெளியான முதல் நாளிலேயே பார்வையாளர்களின் அமோக வரவேற்பை பெற்றிருக்கும் ‘இந்திரா’ படத்திற்கான திரையரங்குகள் அதிகரித்து வருவதோடு, மவுத் டாக் என்று சொல்லக்கூடிய வாய்மொழி விளம்பரம் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. எனவே, தமிழ் சினிமாவில் சமீபகாலங்களில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் வரிசையில் ‘இந்திரா’ படமும் நிச்சயம் இடம் பிடிக்கும் என்று திரையுலகினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

படம் வெளியான ஒரே நாளில் பார்வையாளர்களின் கவனம் ஈர்த்திருக்கும் ‘இந்திரா’ திரைப்படத்தின் வெற்றிக்கு இயக்குநர் சபரிஷ் நந்தா மற்றும் நாயகன் வசந்த் ரவி ஆகியோரது கடின உழைப்பு மட்டும் இன்றி, படத்தின் தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்பாஃன் மாலிக் ஆகியோரது தயாரிப்பு மற்றும் விளம்பர உத்தி மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. 

 

கமர்ஷியல் திரைப்படமாக மட்டும் இன்றி தரமான படைப்பாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு படத்தை தயாரித்தது மட்டும் இன்றி, படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மிக நேர்த்தியாக செய்து வரும் தயாரிப்பாளர்கள் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்பாஃன் மாலிக் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத தயாரிப்பாளர்களாகவது உறுதி.

Related News

10633

சினிமா மற்றும் பொது சேவை பயணங்கள் தொடரும்! - நடிகர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்
Tuesday August-26 2025

ஹீரோ, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என அனைத்து வேடங்களுக்கும் பொருத்தமாக இருக்கும் ஒரு சில நடிகர்களில் துரை சுதாகரும் ஒருவர்...

பாக்யராஜ் சார் படத்திற்கும், என் படத்திற்கு ஒரு சதவீதம் கூட சம்மந்தம் இல்லை - ‘அந்த 7 நாட்கள்’ பட இயக்குநர் எம்.சுந்தர்
Tuesday August-26 2025

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான திரைப்படங்களில் ‘அந்த 7 நாட்கள்’ ஒன்று...

“புரட்சியை பற்றவைக்க உரசிப்போடும் ஒரு தீக்குச்சியாக ‘ஆட்டி’ படைப்பு இருக்கட்டும்” - சீமான் வாழ்த்து
Saturday August-23 2025

’மேதகு - பாகம் 1’ மற்றும் ‘சல்லியர்கள்’ படங்களை இயக்கிய இயக்குநர் தி...

Recent Gallery